பிறந்தநாளில் மகாலட்சுமி ரவீந்தர் எடுத்த முடிவு... குவியும் பாராட்டுகள்
தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை மகாலட்சுமி தனது உடல் உறுப்புகளை தானம் கொடுப்பதாக முடிவு செய்துள்ளார்.
நடிகை மகாலட்சுமி
தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்பு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மகாலட்சுமி. இவரது வில்லித்தனமான நடிப்பு அனைவரையும் கோபம் கொள்ள வைக்கும்.
அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்து வரும் இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்துள்ளார்.
பின்பு சக நடிகருடன் தொடர்பு என பல சர்ச்சைகளில் சிக்கிய இவர் கடந்த ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் உருவக்கேலிக்கு ஆளாகி பல கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக இந்த ஜோடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
பின்பு ரவீந்தர் வெளிநாட்டு நபரை பண மோசடி செய்து ஏமாற்றியதாக சிறையில் அடைக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
மகாலட்சுமியின் பதிவு
இந்நிலையில் சமீபத்தில் மகாலட்சுமி தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளாராம்.
“எனது பிறந்தநாளில், என்னால் முடிந்த விலைமதிப்பெற்ற பரிசை வழங்க முடிவு செய்தேன். நான் உறுப்பு தானம் செய்ய தேர்ந்தெடுத்தேன். எனது உறுப்புகள் மற்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |