ரவீந்தர் வீட்டில் மகிழ்ச்சி செய்தி- மனைவி, குடும்பத்துடன் கொண்டாடிய தருணம்.. மகனும் இருந்தாரா?
ரவீந்தர் குடும்பத்துடன் வீட்டு விஷேசத்தை கொண்டாடிய காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
மகாலட்சுமி- ரவீந்தர்
சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலிக்க திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய திருமண செய்தி சமூக வலைத்தளங்களில் பெரயளவில் பேசப்பட்டது. அப்போது அவர்களின் திருமண புகைப்படங்கள் தான் இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்தன.
90ஸ் தொகுப்பாளினிகளில் முக்கியமான பிரபலமாக அறியப்பட்ட மகாலட்சுமி, சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மகாலட்சுமியின் முதல் திருமண வாழ்க்கை ஒரு சில வருடங்களில் முடிவுக்கு வந்த நிலையில், ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
விஷேசத்தில் வெளியான காணொளி
இந்த நிலையில், பிக்பாஸ் சென்று வீடு திரும்பிய ரவீந்தர் மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வந்தார். அதன் பின்னர் வெள்ளித்திரையில் கவனம் செலுத்து வருகிறார்.
அந்த வகையில், டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். இனி வரும் காலங்களில் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரவீந்தர், மகாலட்சுமியின் பிறந்த நாளை ஹோட்டல் ஒன்றில் கொண்டாடியிருக்கிறார். அப்போது மகாலட்சுமியின் மகன் உட்பட குடும்பத்தினரும் இருந்தார்கள்.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. காணொளியை பார்த்த பலரும், மகாலட்சுமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |