நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா மகாலட்சுமி? ரவீந்தருடன் போட்ட பக்கா பிளான்
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்ட நடிகை மகாலட்சுமி நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரவீந்தர் மகாலட்சுமி
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.
இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதாலும், ரவீந்தரின் உடல் எடையை வைத்தும் ரசிகர்கள் கேள்வி கேள்வி எழுப்பி வந்தனர்.
மகாலட்சுமிக்கு அனில் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், சச்சின் என்ற ஒரு மகனும் இருக்கின்றார். தற்போது ரவீந்தர் தயாரித்து வரும் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்து வருகிறார் மகாலட்சுமி.
பிரபல ரிவியில் புதுமண ஜோடி
திருமணத்திற்குப் பிறகு மகாலட்சுமி ரவீந்தர் சந்திரசேகரனின் படங்களும், பேட்டிகளும் இணையத்தை கலக்கிவரும் நிலையில், இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் இதுகுறித்து ரவீந்தர் தரப்பு எந்தவொரு உறுதியும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் இவர்கள் கலந்துக் கொள்ளும் ’வந்தாள் மகாலட்சுமியே’ என்ற நிகழ்ச்சி ஆயுதபூஜை ஸ்பெஷலாக ஒளிபரப்பாகவிருக்கிறது.
இந்நிலையில் மகாலட்சுமி இனிமேல் நடிப்பிலிருந்து விலகுவதாகவும் மாறாக கணவர் திரைப்படம் தயாரிக்கும் பணியில் இருந்து வரும் நிலையில், மகாலட்சுமி சீரியல் தயாரிக்கும் பணியில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.