அம்மாவை விட வளர்ந்து நிற்கும் நடிகை மகாலட்சுமியின் மகன்! வைரலாகும் புகைப்படம்
தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்த நடிகை மகாலட்சுமி மகனின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை மகாலட்சுமி
சின்னத்திரை நடிகையும் முன்னாள் விஜேவுமான மகாலட்சுமி தனது கணவர் ரவீந்தர் சந்திரசேகரன் குறித்து எழும்பும் சர்ச்சைகளுக்கு அவ்வப்போது பதிலளித்து வருகின்றார்.
ஃபேட்மேன் என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் ரவீந்தர் சந்திரசேகரன் மோசடி வழக்கில் சிக்கி சிறை சென்று வந்த நிலையில், மீண்டும் படங்களில் நடித்தும் தயாரித்தும் வருகிறார்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை விட ரசிகர்களால் அதிகமாக பேசப்பட்டது ரவீந்தர் மகாலட்சுமியின் திருமணம் தான். ரவீந்தரை ட்ரோல் செய்து மீம்ஸ் போட்டவர்கள் கூட அவரை வாழ்த்தினார்கள்.
மகாலட்சுமியின் மகன்
இந்த ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற டிராகன் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு பலரும் கச்சிதமான கதாபாத்திரம் என கலாய்த்துத் தள்ளினர்.
இந்நிலையில் மகாலட்சுமி தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
இப்புகைப்படத்தில் மகாலட்சுமியின் மகன் அவரது தோலுக்கு வளர்ந்து நிற்கின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள் மகன் இப்படி அம்மாவை விட உயரமாக வளர்ந்துவிட்டானே என்று ஆச்சரியத்தில் கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
