மகா சிவராத்திரி 2023! ஆண்டுமுழுவதும் குபேர யோகம்: கட்டாயம் இதை மட்டும் செய்திடுங்க

Maha Shivratri
By Manchu Feb 18, 2023 11:25 AM GMT
Manchu

Manchu

Report

இன்று சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சிவன் பக்தர்கள் கோவில்களுக்கு படைபெயடுத்து வருகின்றனர்.

மாதந்தோறும் சிவராத்திரி பண்டிகை வந்தாலும், மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்று கூறப்படுவதுடன், மக்களால் அதிகம் கொண்டாடப்படுகின்றது. 

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.

மகா சிவராத்திரி 2023! ஆண்டுமுழுவதும் குபேர யோகம்: கட்டாயம் இதை மட்டும் செய்திடுங்க | Maha Shivratri 2023 Puja Method

சிவராத்திரி விரத வகைகள்

  • நித்திய சிவராத்திரி
  • மாத சிவராத்திரி
  • பட்ச சிவராத்திரி
  • யோக சிவராத்திரி
  • மகா சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும்.

அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

மகா சிவராத்திரி 2023! ஆண்டுமுழுவதும் குபேர யோகம்: கட்டாயம் இதை மட்டும் செய்திடுங்க | Maha Shivratri 2023 Puja Method

நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்

முதல் யாமம் பூஜை எவ்வாறு செய்யப்படும்?

முதல் யாம பூஜையானது சோமாஸ்கந்தர் முகூர்த்தத்தில் நடைபெறும். பஞ்சகவ்யம் அபிஷேகம், வில்வ அலங்காரம், தாமரையினால் அர்ச்சனை, பால் அன்னத்தினையும், சர்க்கரை பொங்கலையும் அலரி நிவேதமாகவும், பழ வகையில் வில்வம் பழத்தினை படைத்து நடைபெறும். 

மேலும் பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தனம் மணத்துடன், சாப்பிராணி, சந்தணக்கட்டை புகையுடன், புட்பதீப ஒளியுடன் இந்த பூஜை அரங்கேறும்.

இரண்டாம் யாமம் பூஜை எவ்வாறு செய்யப்படும்?

இரண்டாம் யாம பூஜையானது, மென்முகக் கடவுள் முகூர்த்ததில், பஞ்சாமிர்தம் அபிஷகத்தில், குரந்தை அலங்காரமும், துளி அர்ச்சனையுடனும், பாயாசம், சர்க்கரை பொங்கள் நிவேதமாகவும் வழங்கப்படும்.

மேலும் யசுர் வேதம் தோத்திரத்துடன், அகில் மற்றும் சந்தன மணத்துடன், சாப்பிராணி, குங்குமம் புகையில், நட்சத்திர தீபம் ஒளியில் இந்த இரண்டாம் யாக பூஜையை நடத்துவார்கள்.

மகா சிவராத்திரி 2023! ஆண்டுமுழுவதும் குபேர யோகம்: கட்டாயம் இதை மட்டும் செய்திடுங்க | Maha Shivratri 2023 Puja Method

மூன்றாம் யாமம் பூஜை எவ்வாறு செய்யப்படும்?

மூன்றாம் யாம பூஜையானது இலிங்கோற்பவர் முகூர்த்தத்தில், தேன், பாலோதகம் அபிஷேகத்துடன், கிளுவை, விளா அலங்காரத்துடன், மூன்று இதழ் வில்வம், சாதி மலர் அர்ச்சனையுடன்,  எள் அன்னம் நிவேதனத்துடன், மாதுளம் பழம் படைக்கப்பட்டு பூஜை நடைபெறும்.

மேலும் சாம வேத தோத்திரம், கஸ்தூரி சேர்ந்த சந்தனம் மணத்துடன், மேகம், கருங் குங்கிலியம் புகையுடன், ஐதுமுக தீப ஒளியுடன் மூன்றாம் யாம பூஜையை நடத்துவார்கள்.

நான்காம் யாமம் பூஜை எவ்வாறு செய்யப்படும்?

சந்திரசேகரர்(இடபரூபர்) முகூர்த்தத்தில், கருப்பஞ்சாறு, வாசனை நீர் அபிஷேகத்துடன்,  கரு நொச்சி அலங்காரம், நந்தியாவட்டை அர்ச்சனையுடன், வெண்சாதம் நிவேதனமும், பழவகைகளில் நாளாவித பழங்களும் வைக்கப்படும்.

அதர்வண வேதம்  தோத்திரமாகவும், புணுகு சேர்ந்த சந்தணம் மணத்துடன், கர்ப்பூரம், இலவங்கம் புகையுடுன், மூன்று முக தீபம் ஒளியுடன் இந்த பூஜை அரங்கேறும்.

மகா சிவராத்திரி 2023! ஆண்டுமுழுவதும் குபேர யோகம்: கட்டாயம் இதை மட்டும் செய்திடுங்க | Maha Shivratri 2023 Puja Method

விரதத்தின் கதை தெரியுமா?

ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்.

அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்.

அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்றும் பிராத்தித்தார்.

இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றார்.

மகா சிவராத்திரி 2023! ஆண்டுமுழுவதும் குபேர யோகம்: கட்டாயம் இதை மட்டும் செய்திடுங்க | Maha Shivratri 2023 Puja Method

பரிகாரங்கள் என்ன?

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும்.

'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,' உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும், ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.

அதனால் தான் "சிவராத்திரி" விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Swindon, United Kingdom

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, திருநெல்வேலி, Markham, Canada

13 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, கிளிநொச்சி, திருவையாறு

06 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, Markham, Canada

13 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada, Michigan, United States, Altena, Germany

10 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Anaipanthy

03 May, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US