லெஜெண்ட்ஸ் ரவுண்டில்' மிரட்டிய ராதிகா சரத்குமார்... வைரலாகும் அசத்தல் நடிப்பு!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் மகா நடிகை சீசன் 2 நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்று வரும் நடிகை ராதிகா சரத்குமார், Legends Round விசில் பறக்கும் நடிப்பை வெளிப்படுத்தி அரங்கத்தை அதிரவைத்த காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
மகா நடிகை சீசன் 2
பெண்களின் நடிப்பு திறமையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மகா நடிகை சீசன் 2 நிகழ்ச்சி நேற்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிப்பரப்பாகி வருகின்றது.

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சி ஏற்கனவே முதல் சீசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசன் மேலும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக மூன்று முக்கிய பிரபலங்கள் நடுவர்களாக இணைந்துள்ளனர். தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன், அனுபவம் மிக்க நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்வாதிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

குறித்த நிகழ்ச்சியில், Legends Round இல், ராதிகா சரத்குமார் தனது இயல்பான நடிப்பு திறமையால் மேடையையே அதிரவைத்ததுடன், அவரது நடிப்புக்கு அரங்கமே விசில் சத்தத்தாலும் கரகோசத்தாலும் அதிர்ந்தது.
தற்போது, ராதிகா சரத்குமார் 'Legends Round' சுற்றில் நடித்த அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அவரது நடிப்புத் திறன் மெய் மறக்க செய்வதாக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |