இன்று மகா பாக்ய யோகம் கொட்டி கொடுக்கும் குரு! குபேர யோகம் யாருக்கு?
மிதுன ராசியில் ‘மகா பாக்ய யோகம்’ உருவாக இருக்கிறது. இது பல ராசிகளுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும்.

மகா பாக்கிய யோகம்
இன்று மே 14ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். ஏற்கனவே மிதுன ராசியில் குரு இருக்கிறார். இவை இரண்டும் சேர்ந்து மகா பாக்கிய யோகத்தை உருவாக்குகிறது.

ஜோதிடத்தில் இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக இருக்கிறது. அதேபோல் மே 15ஆம் தேதி புதன் பகவான் ரிஷப ராசிக்கு செல்கிறார்.
அடுத்தடுத்து நடக்கும் இந்த கிரக பெயர்ச்சிகளால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாகப்போகிறது. அது எந்த ராசிகள் என்பதை பார்க்லாம்.

மேஷம்
- புதன் மற்றும் சுக்கிர பகவானின் பெயர்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கொடுக்கும். உயர்பதவி கிடைக்கும். முடிவுகள் நல்லபடியாக முடியும். இம்மாதத்தில் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். வருமானத்தை அதிகரிப்பீர்கள். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பணிபுரியும் நிறுவனத்தில் சம்பள உயர்வு கிடைக்கும்.
ரிஷபம்
- மகா பாக்ய யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு எடுக்கும் காரியங்கள் வெற்றியில் முடியும். ரிஷபத்தின் அதிபதி சுக்கிர பகவான் இதனால் இவர்கள் செல்வம், செழிப்புக்கு குறை இருக்காது. மகா பாக்ய யோகத்தால் அரசியல் செல்வாக்கு கிடைக்கும். வேலையில் உயர் பதவிகள் கிடைக்கும். செல்வத்தில் வளர்ச்சி கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
சிம்மம்
- சிம்ம ராசிக்காரர்களுக்கு மகா பாக்ய யோகத்தால் நினைத்த காரியம் நிறைவேறும். உங்கள் நீண்ட ஆசைகள் நிறைவுறும். சுப கிரகங்களின் பெயர்ச்சியால் லாப ஸ்தானம் பலமாகிறது. இதனால் செல்வ செழிப்பு அதிகரிக்கும். வசதி பெருகும். குபேரனின் அருளால் ராஜ யோகம் கிடைக்கும். கனவுகள் நனவாகும். நிலையான சொத்துக்கள் வாங்குவீர்கள்.
துலாம்
- துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி பல மாற்றங்களை கொண்டு வரும். நிதி விஷயங்களிலும், வியாபாரத்திலும் பல நன்மை கிடைக்கும். கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதால் சரியாக திட்டமிட்ட வேலைகள் முடியும். குபேர யோகம் காரணமாக அளவில்லாத மகிழ்ச்சி பெருகும். ஆனந்தம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். லாபம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முடிக்கப்பட்டாத நல்ல காரியங்கள் முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).