ஆசையால் நேர்ந்த விபரீதம்: நள்ளிரவில் தாய், தங்கையை கொலை செய்த அக்கா
தனது இரண்டாவது காதலைக் கண்டித்த தாய் மற்றும் தனது அக்காவை இளம்பெண் ஒருவர் தனது புதிய காதலனால் வெட்டி கொலை செய்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டாங்குடியைச் சேர்ந்தவர், நீலாதேவி(47). இவருக்கு மகேஷ்வரி, அகிலாண்டேஷ்வரி என்ற இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இருவருக்கு திருமணமும் முடித்து வைத்துள்ளார்.
இதில் இளைய மகள் அகிலாண்டேஷ்வரி கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தாயுடன் வசித்து வந்த நிலையில், மூத்த மகள் மகேஷ்வரி கணவருடன் அதே ஊரில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வேறொரு நபருடன், பழகிவந்துள்ள மகேஷ்வரியை தாயும், தங்கையும் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பத்தன்று மர்மநபர்களால், நள்ளிரவில் அகிலாண்டேஷ்வரியும், தாய் நீலா தேவியும் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசாரின் விசாரணையில், மகேஷ்வரின் தகாத பழக்கம் வெளிவந்ததும், கொலையான தாயும், மகளும் கண்டித்ததும் தெரியவந்துள்ளது.
பின்பு மகேஷ்வரியிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தியதில், தனது கள்ளக்காதலன் சசிக்குமார் மூலம் இருவரையும் வெட்டி படுகொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த பொலிசார், அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.