அருமையான சுவையில் மதுரை தண்ணி சட்னி ரெசிபி இதோ! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க
நாம் எல்லோரும் இட்லி தோசைக்கு சட்னி வைத்து சாப்பிடுவது வழக்கம். சட்னி என்றாலே தேங்காயில் செய்வது தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு ரெசபி.
இன்று தேங்காய் பயன்படுத்தாமல் சுவையான தண்ணி சட்னி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இது மற்ற சட்னிகள் போல் அல்லாமல் விரைவாக செய்து முடிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சட்னியை விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள்
- வெங்காயம் - 2
- பச்சைமிளகாய் - 10
- உப்பு - தேவையான அளவு
- பூண்டு - 5 பல்
- காஞ்சமிளகாய் - 2
- பொட்டுகடலை - அரை கப்
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கடுகு - தேவையான அளவு
- வரமிளகாய் - 2
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- எண்ணெய்- 2 தேக்கரண்டி
செய்யும் முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் கொஞ்சமாக ஊற்றி பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் பூண்டு அகியவற்றை நன்றாக வதக்கி எடுத்து கெள்ள வேண்டும்.
வெங்காயம் பொன்நிறத்தில் வதங்கி வந்தவுடன் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்க வேண்டும். பின்னர் இது எல்லாவற்றையும் ஒரு மிக்ஸியில் மாற்ற வேண்டும்.
பின்னர் அதனுடன் பொட்டுக்கடலை ,உப்பு போன்றவற்றை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் இதி்ல் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இன்னும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு ,உளுந்து இது இரண்டையும் வறுக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் காஞ்சமிளகாய், கறிவேப்பிலை ,சின்னவெங்காயம் பொடியாக நறுக்கியது போன்றவற்றை சேர்த்து வறுக்கும் போது அரைத்த கலவையை இதனுடன் சேர்க்க வேண்டும்.
பின்னர் இந்த கலவையில் கெட்டிபதம் குறையும் வரை தண்ணீர் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்து எடுத்தால் தண்ணி சட்னி ரெடி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |