உடலில் பல நோய்களை கட்டுக்குள் வைத்திருக்கும் கஜி நேமு எலுமிச்சை?
எலுமிச்சை பழம் என்பது பொதுவாக எல்லா இடத்திலும் கிடைக்கும் ஒரு பழமாகும். இந்த வகையில் அசாம் மாநிலத்தில் விளையும் ஒரு வகையான எலுமிச்சை கஜி நேமு எனும் பழமாகும்.
இது சிட்ரஸ் லெமன் என அழைக்கப்படுகிறது. இந்த பழம் மற்ற எலுமிச்சை பழங்களை விட தனித்துவமான வாசனையை கொண்டு காணப்படுகிறது.
இந்த எலுமிச்சையின் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள் எவை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கஜி நேமு
1. இந்த கஜி நேமு எலுமிச்சையில் வைட்டிமின் சி யின் அளவு கூடுதலாக காணப்படுகின்றது மற்றும் இதில் ஆன்டி ஆக்சிஜன்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலுவடைய செய்யும். இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் சிறந்தது.
2. இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால் அது நமது உடலில் நீர்ச்கத்து அதிகரிக்க வைக்கிறது. இது ஹைட்ரேட்டாகவும் வைத்திருக்கச் செய்யும். உடலில் உள்ள மற்ற நீர்மங்களையும் சமநிலையில் வைக்க உதவுகிறது.
3. இந்த கஜி நேமுவில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஹீமோக்குளோபின் குறைவாக இருப்பவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம். அப்படி உண்பதால் உடலில் ஹீமோக்குளோபின் அளவு அதிகரிக்கும். அனீமியா என்னும் ரத்தசோகையும் கட்டுக்குள் வரும்.
4. இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறதால் இது வயிற்றில் உள்ள குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் ஜீரணத்தை சீராக நடத்தி குடலை சுத்தமாக வைத்திருக்கும். இதை நீங்கள் தினமும் உணவில் ஜீஸ் அல்லது முழுப்பழமாகவும் சேர்த்து கொள்ளலாம்.