மதுரை பாணியில் காரசாரமான சிக்கன் கொத்துக்கறி... பண்ணலாமா?

Healthy Food Recipes
By Vinoja May 03, 2026 08:17 AM GMT
Report

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நன்றாக சமைத்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் அனைவதும் ஆசைப்படுவார்கள்.

அதிலும் அசைவ பிரியர்களின் வீட்டிலுள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சிக்கனை விரும்பி சாப்பிடுவார்கள்.

மதுரை பாணியில் காரசாரமான சிக்கன் கொத்துக்கறி... பண்ணலாமா? | Madurai Style Chicken Kothu Kari Recipe In Tamil

எப்போதும் போல் சிக்களை குழம்பு அல்லது பொரியல் செய்யாமல் ஒரு முறை மதுரை பாணியில் காரசாரமாக கொத்து கறி செய்து பாருங்கள்.

எவ்வாறு எளிமையாக படிடுறைகளில் சிக்கன் கொத்துகறி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

பாகற்காய் சிப்ஸ் - கசப்பே இல்லாமல் எப்படி செய்வது? தயிர் சாதத்திற்கு சூப்பர்

பாகற்காய் சிப்ஸ் - கசப்பே இல்லாமல் எப்படி செய்வது? தயிர் சாதத்திற்கு சூப்பர்

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்

அரைத்த சின்ன வெங்காயம் - 1/2 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி

மிளகுத் தூள் - 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி

மல்லித்தூள் - 1 தே.கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 1/2 கப்

தேங்காய் எண்ணெய் - 1தே.கரண்டி 

மதுரை பாணியில் காரசாரமான சிக்கன் கொத்துக்கறி... பண்ணலாமா? | Madurai Style Chicken Kothu Kari Recipe In Tamil

தாளிக்க தேவையானவை 

தேங்காய் எண்ணெய் - 1 தே.கரண்டி 

சோம்பு - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

வர மிளகாய் - 2 

இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தே.கரண்டி

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை 

மிளகுத்தூள் - 1 தே.கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தே.கரண்டி

கொத்தமல்லி இலைகள் - சிறிது (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிதளவு 

மதுரை பாணியில் காரசாரமான சிக்கன் கொத்துக்கறி... பண்ணலாமா? | Madurai Style Chicken Kothu Kari Recipe In Tamil

செய்முறை 

முதலில் எலும்பில்லாத சிக்கனை நன்றாக கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து  சின்ன வெங்காயத்தை கொரகொரப்பான விழுதாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு பிரஷர் குக்கரில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய சிக்கனைச் சேர்த்து, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு ஆதியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

மதுரை பாணியில் காரசாரமான சிக்கன் கொத்துக்கறி... பண்ணலாமா? | Madurai Style Chicken Kothu Kari Recipe In Tamil

அதனையடுத்து அதில் அரைத்த  சின்ன வெங்காய விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து, 5 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும். 

பிரஷர் வெளியேறியதும் மூடியைத் திறந்து, கரண்டியால் சிக்கனை நன்றாக மசித்து தனியாக வைக்கவும்.

பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றவும். சூடானதும் அதில் சோம்பைச் சேர்த்து நன்றாக பெரியவிட வேண்டும். 

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் உடைத்த வர மிளகாயைச் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு,  பின்னர் ஒரு கைப்பிடி அளவு நறுக்கிய புதிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிட வேண்டும். 

மதுரை பாணியில் காரசாரமான சிக்கன் கொத்துக்கறி... பண்ணலாமா? | Madurai Style Chicken Kothu Kari Recipe In Tamil

சுவையான பனீர் பட்டர் மசாலா எப்படி செய்யனும் தெரியுமா?

சுவையான பனீர் பட்டர் மசாலா எப்படி செய்யனும் தெரியுமா?

இப்போது சமைத்த சிக்கனைச் சேர்த்து வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கிளறவும்.

அதன் பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக கிளறிவிட வேண்டும்.

பின்பு மசாலா சிக்கனில் நன்றாக கலக்கும் வரை நன்றாக கலந்துவிட்டு, கடைசியில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்தால் அவ்வளவு தான், அசத்தல் சுசையில்,  சிக்கன் கொத்துக்கறி தயார்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US