மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட திடீர் காணொளி! மதுரை முத்து மனைவிக்கு நடந்தது என்ன?
கொமடி நடிகரும், பட்டிமன்ற பேச்சாளராகவும் வலம்வரும் மதுரை முத்துவின் மனைவி வெளியிட்டுள்ள காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை முத்து
பட்டிமன்ற பேச்சாளராகவும், நகைச்சுவை நடிகராகவும் வலம் வரும் மதுரை முத்து, தனது சொந்த வாழ்க்கையில் பல சோகங்களை கடந்து வந்தாலும் மக்களை எப்பொழுதும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார்.
மதுரை முத்து முதல் முதலாக லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.
ஆனால் இவர்களது வாழ்க்கை அவ்வளவாக நீடிக்கவில்லை. ஆம் கடந்த 2016ம் ஆண்டு கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரது மனைவி மரணமடைந்தார்.
மனைவியின் இறப்பு பெரிய அளவில் பாதித்த நிலையில், பின்பு திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். பின்பு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் இரண்டாவதாக முதல் மனைவியின் தோழியான நீது என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மனைவியுடன் பிரச்சனையா?
இவர் பல் மருத்துவர் என்று கூறப்படுகின்றது. இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை என்று வாழ்ந்து வந்த இவர்கள் வாழ்க்கையில் தற்போது பிரச்சினை ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆம் நீது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான ரீல்ஸ் வீடியோக்களை போட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட அவர் போட்ட வீடியோ ஒன்றில், "எனக்குன்னு ஒரு உயிர் வேண்டும். அது என்னை மட்டுமே நேசிக்க வேண்டும். அவருக்காகவே நான் போட்டு வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும்.
தற்போது வெளியிட்டுள்ள காணொளியில் கையில் ட்ரிப்ஸ் பேண்டேடுன், இந்த உலகத்தில் மிக அதிகமாக பிடித்தது அவளுக்கு அவன் தானே..! என்று அந்த வீடியோவில் வார்த்தைகளுக்கு ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார்.
அதோடு ஸ்பிடலில் தன்னுடைய கையில் ட்ரிப்ஸ் ஏற்றிய பேன்டேஜ் இருப்பதை காட்டி சோகமாக ரியாக்சன் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை அவதானித்த ரசிகர்கள் இருவருக்கும் ஏதோ பிரச்சினை இருப்பதாக கூறுவதுடன், இதற்கான விளக்கத்தை இருவரில் ஒருவர் கட்டாயம் கூற வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றது.