பெற்றார் இறப்பிற்கு கூட கண்கலங்காத மதுரை முத்து.. கண்ணீருடன் வெளியிட்ட வீடியோக்காட்சி
விஜயகாந்தின் இறப்பு குறித்து மதுரை முத்து பகிர்ந்த அனுதாப வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விஜயகாந்த்
“ கேப்டன் ” என சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் அன்பாக அழைக்கப்படுபவர் விஜயகாந்த்.
இவர் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் காலமானார்.
இதனை தொடர்ந்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் நேரில் சென்று விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.
தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் அவர் வீட்டு முன்னாள் வந்து படுத்திருந்து அஞ்சலி செலுத்து அளவிற்கு பிரபலமானவராக வாழ்ந்து வந்துள்ளார்.
மதுரை முத்து உருக்கம்
இந்த நிலையில், சில திரைப் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ மூலமாகவும் பதிவுகள் மூலமாகவும் விஜயகாந்த்திற்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.
அந்த வகையில், நகைச்சுவை நடிகரும் தொலைக்காட்சி பிரபலமான மதுரை முத்து அவரது சமூக வலைதளபக்கத்தில் விஜயகாந்த் குறித்து பேசி வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
அதில், “ என்னுடைய பெற்றார்கள் இறந்த போதும் கூட நான் இவ்வளவு கஷ்டப்படவில்லை. கேப்டன் மீது அப்படி ஒரு ஈர்ப்பை அவர் சம்பாதித்து இருப்பது ஆச்சரியமான விஷயம். தமிழ்நாட்டிற்கான சாபக்கேடு என்றால் நல்ல தலைவர் கிடைக்கும் போது அவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டு இறப்பது தான்.
எந்த ஒரு பிரபலத்தின் மறைவின் போதும் இப்படி ஒரு காணொளியை நான் பதிவிட்டதில்லை. அடக்க முடியாத துயரத்தினாலே இப்படியான காணொளியை பதிவிடுகிறேன்.” என வறுத்தமாக பேசியுள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் இவர் இப்படி பேசியது அவரின் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |