வீரர்களை மிரளவைத்த Top 10 ஜல்லிக்கட்டு காளைகள்
மதுரை அலங்காநல்லூரில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
இப்போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார், இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் தங்க காசு, பீரோ, கட்டில், அண்டா, பானை ஆகியன பரிசாக வழங்கப்பட்டது.
மொத்தமாக நடந்து முடிந்த 10 சுற்றுகள் முடிவில் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவர் 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார், அவருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி 2ம் இடம் பிடித்தார், அவருக்கு பைக் பரிசாக அளிக்கப்பட்டது.
குன்னத்தூரை சேர்ந்த திவாகர் 13 காளைகளை அடக்கி 3ம் இடத்தை பிடித்தார், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மொத்தம் 810 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில் மாடுபிடி வீரர்களை மிரளவைத்த டாப் 10 காளைகள் பற்றி காணலாம்.