அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... நேரலை காட்சி இதோ
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் ஜல்லிக்கட்டு களைகட்டியுள்ள நிலையில் இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகின்றது.
ஜல்லிக்கட்டு
இன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சிறந்த காளை உரிமையாளருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக ட்ராக்டர் ஒன்றும், சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பாக ஒரு காரும் வழங்கப்படுகின்றது.

அதுவே இரண்டாவது பரிசு பெறும் காளை உரிமையாளருக்கு கன்றுடன் சேர்ந்த நாட்டு மாடு பரிசாக வழங்கப்படுகின்றது. இரண்டாம் இடத்தை பிடிக்கும் வீரருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படுகின்றது.
மூன்றாவது இடத்தை பிடிக்கும் இளைஞருக்கு இ-ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு அறிவிப்பினையும் கொடுத்துள்ளார்.
அதாவது ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் இளைஞர்களுக்கு அரங்காவல் துறையில் அரசு வேலை வழங்குவதாகவும், அலங்காநல்லூரில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் பயிற்சி கூடம் மற்றும் முதலுதவி கட்டிடம் அமைப்பதாகவும் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |