வெகு விமரிசையாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி! நேரலை
மதுரை பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் நேரலையை ஐபிசி தமிழ் சேனலின் மூலம் காணொளியாக காணலாம்.
தமிழர்களின் பாரம்பரிய மரபை பறைசாற்றும் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு நேற்றைய தினம் பொங்கல் பண்டிகை தினத்தில் மதுரை அவனியாபுரத்தில் ஆரம்பமானது.

அதனை தொடர்ந்து இன்று மதுரை பாலமேட்டில், நடைபெற்று வருகின்றது.ஜல்லிகட்டிற்காக 1000 காளைகளும், 600 மாடுபிடிவீரர்களுக்கும் டோக்கன்வழங்கப்பட்டது.ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளை உரிமையாளருக்கு கார், டிராக்டர், கன்றுடன் கூடிய நாட்டுப் பசு மாடு இருசக்கர வாகனம் கட்டில் பீரோ தங்கக் காசு அண்டா சைக்கிள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்க உள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டில் 2வது சுற்று தொடங்கிய நிலையில், நீள நிற உடையில் வீரர்கள் களமிறங்கினர். 2ம் சுற்று முடிவில் மொத்தம் 195 மாடுகள் களமிறங்கிய நிலையில், 25 மாடுகள் பிடிபட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |