சிகிச்சை பலனின்றி மதுரை ஆதினம் காலமானார்... சோகத்தில் மூழ்கிய பக்தர்கள்!
மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பலன் இன்றி தற்போது மறைந்துள்ளார்.
மதுரை ஆதீனம்(77) அருணகிரி நாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, அவருக்கு சுவாசக் கோளாறு இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்த பின்னடைவை சந்தித்து வந்தது. இதனால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்தனர்.
மதுரை ஆதீனம் உடல்நலத்தில் முன்னேற்றம் பெற்று , விரைவில் பூரண குணமடைந்து மதுரை ஆதினத்திற்கு திரும்ப வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வந்தனர்.
இந்த நிலையில், உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் மதுரை ஆதீனம் இன்று சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரதுமறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.