அம்மாவை அழகில் ஓரங்கட்டிய மகள்கள்.. வைரலாகும் நடிகை மதுபாலாவின் மகள்களின் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை மதுபாலா. இவர், கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அழகன் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
1990களில் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். அப்போதைய காலகட்டத்தில் இவரைத் தெரியாத மனிதர்களே இருந்திருக்க வாய்ப்பில்லை.
இதன்பின்னர், திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார் இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது மதுபாலா தன்னுடைய இரண்டு மகள்களான அமேயா, கீயா ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. நடிகை மதுபாலாவுக்கு இவ்வளவு அழகான மகள்களா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.