55 வயதை கடந்தும் கொள்ளை அழகில் மின்னும் மாதுரி தீட்சித்... வர்ணிக்கும் ரசிகர்கள்
நடிகை மாதுரி தீட்சித்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகை மாதுரி தீட்சித்
பாலிவுட் திரையுலகில் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை மாதுரி தீட்சித் நேனே. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுவரை இவர் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 1984ம் ஆண்டு ‘அபோத்’ என்ற நாடகத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். இதனையடுத்து, இந்தி சினிமாத்துறையில் மாதுரிக்கு நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.
தேசாப், தில், பீட்டா, சாஹிபான் உட்பட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்தார். 1990கள் மற்றும் 2000களின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை மாதுரி தீட்சித் நேனே திகழ்ந்தார்.
இவர் டாக்டர் ஸ்ரீராம் நேனே என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் மாதுரி தனது 23வது திருமண நாளைக் கொண்டாடினார். தன் கணவர் நேனேவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
கொள்ளை அழகில் மின்னும் மாதுரி தீட்சித்
இந்நிலையில், நடிகை மாதுரி தீட்சித் தனது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 55 வயதை கடந்தும், கொள்ளை அழகில் நடிகை மாதுரி தீட்சித் போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அடடா... 55 வயதை கடந்தும் இப்படி ஒரு அழகில் இவர் மின்னுகிறாரே... என்று அவர் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.