பிரபுதேவா என்னை கஷ்டப்படுத்தினார்! மனம் திறந்த நடிகை மதுபாலாவின் பேட்டி
90களில் கொடிகட்டி பறந்த நடிகை மதுபாலாவின் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அழகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மதுபாலா, தொடர்ந்து மணிரத்தினத்தின் ரோஜா படம் மூலம் இந்திய நடிகையாக பிரபல்யமானார்.
இதனையடுத்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் படவாய்ப்புகள் குவிந்தது.
சினிமாவில் இருந்த போதே 1999ம் ஆண்டு ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பிரபுதேவா தன்னை காயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அதில், அந்த காலத்தில் திருமணமான நடிகைகளால் நடிக்க முடியாது, ஆனால் இப்போது திருமணமாகியும் நடிக்கிறார்கள்.
திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என அறிவித்துவிட்டே நடிக்கிறார்கள், நான் மும்பையில் வளர்ந்தவள்.
இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்றே விரும்பினேன், ஆனால் தமிழ் படத்தில் தான் அனைத்தையும் கற்றுக்கொண்டேன்.
மிஸ்டர் ரோமியோ பண்ணும் போது பிரபுதேவா தான் சிறந்த டான்ஸர், தண்ணீரை காதலிக்கும் பாடலின் போது நான் நடனமாட நேரம் எடுத்துக்கொள்வேன் என பிரபுதேவா நினைத்தார் போல.
செட்டை விட்டு சென்றுவிட்டார், எனக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள், 2 மணிநேரம் பயிற்சி எடுத்தபின்னரே அந்த பாடலை எடுத்தார்கள்.
அப்போது எனக்கு தோன்றியது, ஏன் என்னால் ஆடமுடியாதா? பயிற்சி எடுத்து தான் அவருடன் ஆட முடியுமா? அந்த சம்பவம் என்னை மிகவும் காயப்படுத்தியது.
பாடல் ஹிட்டானது, ஆனால் அது உருவான விதம் என் ஈகோவை காயப்படுத்தியது, விட்டுக்கொடுப்பது நல்லது தான், ஆனால் எதில் விட்டுக்கொடுக்கிறோம் என்பது முக்கியம் என தெரிவித்துள்ளார்.