மாதம்பட்டி ரங்கராஜின் புதிய ஸ்டைலிஸ்ட் பவித்ரா யார்ன்னு தெரியுமா? வைரலாகும் தகவல்
மாதம்பட்டி ரங்கராஜ் செம ட்ரெண்டிங்கான கருப்பு நிற ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்து புதிய புகைப்படங்களை வெளியிட்டு தனது புதிய ஆடை வடிவமைப்பாளரை டேக் செய்திருக்கின்றார்.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
அண்மை காலமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்லடாவை இரண்டாம் திருமணம் செய்த சர்ச்சையால் இவரின் பெயர் இணையத்தில் அதிகம் அடிப்படுகின்றது.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற வரும் இவர், இந்நிகழ்சிக்காக ஸ்பெஷலாக தயாராகி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்தவகையில் கருப்பு நிற செம ட்ரெண்டிங்கான உடையில், குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சி செட்டில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, தனது ஆடை வடிவமைப்பாளர் பவித்ரா சதிஷ் என்று அவரை டேக் செய்திருக்கிறார்.
குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது. பவித்ரா சதிஷ் பிரபல நடிகர் ராதாரவியின் பேத்தியும், நடிகவேல் எம்.ஆர். ராதாவின் கொள்ளுப் பேத்தியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |