இதுதான் மிரட்டி காதலித்ததா? ஜாய் கிறிஸ்டில்லாவின் அடுத்த வீடியோ
கணவர் மாதம்பட்டி ரங்கராஜை மிரட்டி திருமணம் செய்தேனா என்பதை நிரூபிக்க காணொளி ஒன்றினை கிறிஸ்டில்லா வெளியிட்டுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ்
நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவினை கடந்த 2023ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
ஆனால் இவரது திருமண விவகாரத்தினை வெளியே விடாமல் இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஜாய் கிறிஸ்டில்லா திருமண புகைப்படத்தினை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.

இவர் வெளியிட்ட புகைப்படத்திற்கும், தகவலுக்கு எந்தவிதமான பதிலும் மாதம்பட்டி ரங்கராஜ் கொடுக்காமல் இருந்தார். இந்த பிரச்சனை நாளடைவில் பூதாகரமாக மாறி தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இத்தருணத்தில் நிறைமாதமாக இருந்த கிறிஸ்டில்லாவிற்கும் குழந்தை பிறந்துள்ள நிலையில், தனது உடல்நிலை மோசமாக இருந்தாலும் நீதிமன்றத்திற்கு வந்து வழக்கை எதிர்கொண்டு வருகின்றார்.

மாதம்பட்டி கூறுகையில், தன்னை மிரட்டி இவ்வாறு திருமணம் செய்ய கூறியதாக கூறியதுடன், அவரது மனைவியும் நேற்றைய தினத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய காதல் வீடியோ காட்சியினை வெளியிட்டு, இது தான் மிரட்டலின் பெயரில் தன்னை காதலித்தாரா? திருமணம் செய்தாரா? என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |