குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக்
சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் டிஎன்ஏ ரிப்போட்டில் குழந்தை தன்னுடையது என்று வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் குழந்தையின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ்
நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவினை கடந்த 2023ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
ஆனால் இவரது திருமண விவகாரத்தினை வெளியே விடாமல் இருந்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். ஆனால் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பு புகைப்படங்களை வெளியிட்டு அனைவருக்கும் தெரியப்படுத்தினார் ஜாய்.

இதன் பின்பு ரங்கராஜ் வாழ்க்கையில் பெரும்புயல் ஏற்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும். தற்போது ஜாய் தனது குழந்தையை குறைபிரசவத்தில் பெற்றெடுத்தார்.
இந்நிலையில் தனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள காணொளிகளை நீக்க கோரி மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
டிஎன்ஏ சோதனை
கிரிஸில்லாவின் வழக்கறிஞர், மாதம்பட்டி தனது முதல்மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, கிறிஸ்ஸில்லாவுடன் வாழ்வதாக கூறி ரங்கராஜ் ஏமாற்றியதாக கூறியுள்ளார்.
மேலும் ரங்கராஜை விசாரணை செய்யாமலே போலிசார் அனுப்பிவிட்டதாகவும், கர்ப்பிணி பெண்ணான கிறிஸ்ஸில்லாவை விசாரணைக்காக 8 மணிநேரம் காக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.

ரங்கராஜ் தரப்பில், குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுத்த பின்பு ரங்கராஜ் குழந்தை என்பது தெரியவந்தால், குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
ஆனால் தற்போது சமூகவலைத்தளங்களில் தனது நற்பெயரை பாதிக்கும் வகையில் மோசமான காணொளிகளை வெளியிட்டு அதனை யூடியூப் சேனல்கள் பணமாக்கி வருவதாகவும், ஆதலால் அவதூறு பரப்பும் காணொளிகளை நீக்கக் கோரி வாதம் வைக்கப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த நீதிபதி, எழுத்துப்பூர்வமாக இருவரது வாதங்களையும் 14ம் தேதி தாக்கல் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளதுடன், வழக்கின் தீர்ப்பை தேதி அறிக்காமல் தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |