Bigg Boss: பிக்பாஸில் பாருவின் பரிதாபநிலை... தலைவர் பதவிக்கு ஏற்பட்ட மோதல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தலைவர் பதவிக்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் பார்வதியை சபரி கீழே பிடித்து தள்ளிவிட்டுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு எவிக்ஷன் நடைபெற்றுள்ளது.
பிரவீன், துஷார் இருவரும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதில் பிரவீன் பயங்கரமாக அழுதுகொண்டே வெளியேறினார்.
இந்நிலையில் இன்று வீட்டில் தலைவர் பதவிக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சபரி, திவ்யா, பாரு மூன்று பேரும் போட்டியிட்டுள்ளனர்.
இதில் ஒரு கட்டத்தில் பாருவை சபரி கீழே பிடித்து தள்ளிவிடுகின்றார். சபரியின் இந்த செயல் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

தற்போது பாருவிற்கு கண்ணில் பிரச்சனை வேறு காணப்படுகின்றது. ஆனால் அந்த கண்ணுடன் தனது விளையாட்டில் பார்வதி தெறிக்க விட்டு வருகின்றார்.
பின்பு பாருவிற்கும், விக்கல்ஸிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் விக்கல்ஸ் பாருவை கலாய்க்கும் விதமாக பேசியது காமெடியை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |