அடுப்பு இல்லாத பச்சை புளி ரசம்- ரங்கராஜ் ஸ்டைலில் வைப்பது எப்படி?
மழைக்காலங்கள் வந்து விட்டால் சளி, இருமலுக்கு பஞ்சம் இருக்காது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் சளி இருமலை மருந்து மாத்திரைகளால் சரிச் செய்ய முயற்சிப்பதை விட நிரந்தர தீர்வை தேடித்தரும் உணவுகளால் கட்டுபடுத்துவது சிறந்தது.
அந்த வகையில், சளி, இருமலில் இருந்து நிவாரணமளிக்கும் உணவு ரெசிபி தான் மிளகு ரசம். காரசாரமாக செய்து குடிக்கும் பொழுது நெஞ்சில் படிந்திருக்கும் சளி மெதுவாக இறங்கும்.
அதே சமயம், மிளகு சளி தொல்லையை அடியோடு இல்லாமல் செய்யும் சத்துக்களும் உள்ளன. மேலும், மதிய வேளைகளில் வைக்கும் சூடான சாதத்துடனும் ரசத்தை ஊற்றி அப்பளம் பொறித்து வைத்து சாப்பிடலாம்.
அப்படியாயின், நாள்ப்பட்ட சளி இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் பச்சை புளி ரசம் எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பூண்டு - 10 மிளகு
- சீரகம்- 2 கரண்டி
- மிளகாய்-2
- உப்பு
- பச்சை மிளகாய்-2
- சின்ன வெங்காயம்-3
- புளி- ஒரு கப் அளவு
- கொத்தமல்லி, கறிவேப்பிலை
- பெருங்காயத்தூள்- 1/2 தேக்கரண்டி
முதலில் பூண்டு, மிளகு இரண்டையும் போட்டு நன்றாக இடித்துக் கொள்ளவும்.
அதனுடன் சீரகமும் சேர்த்துக் கொள்ளலாம் அதன் பின்னர் இழுத்த கலவையுடன் புளி தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு, இரண்டு காய்ந்த மிளகாயை எடுத்து உடைத்து போடவும்.
அடுத்து, இரண்டு பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக போட்டு கிளறி விடவும். கல் உப்பு இருந்தால் தேவையான அளவு கல் உப்பு சேர்க்கலாம்.
இறுதியாக பெருங்காயப்பொடி கொஞ்சமாக தூவி கலந்து விட்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை இரண்டையும் ஒன்றாக போட்டால் அடுப்பு இல்லாமல் பச்சை புளி ரசம் தயார். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றால் கொஞ்சமாக காரத்தை குறைத்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |