Madhampatty Rangaraj Style: மணக்க மணக்க மிகவும் சுவையான வெண்டைக்காய் மோர்க்குழம்பு
நாம் எல்லோரும் பொதுவாக சாதத்திற்கு பல வகையான கறிவகைகளை செய்து சாப்பிட்டிருப்போம். அந்த வகையில் இன்று வெண்டக்காயை வைத்து மோர்க்குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெண்டக்காயில் அதிக ஊட்டச்சத்துக்கள் காணப்படுகினறன. நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிப்பதை தடுக்கும். சுவாசம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் ஊற வைத்த நீர் அருந்துவது நல்லது.
பிஞ்சு வெண்டக்காயை வேகவைத்து எடுத்த நீருடன் சர்க்கரை சேர்த்து குடித்தால் இருமல், நீர்கடுப்பு சரியாகும். இவ்வாறு பல பலன் தரும் வெண்டக்காயை வைத்து மோர்க்குழம்பு எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தயிர் ¼ கிலோ
- வெண்டைக்காய்
- துருவிய தேங்காய்
- நெல்லிக்காய் அளவு புளி
- 50 கிராம் கொத்தமல்லி விதைகள்
- 100 கிராம் துவரம் பருப்பு
- 100 கிராம் கடலை பருப்பு
- 6 பச்சை மிளகாய்
- ஒரு துண்டு இஞ்சி
- 6 வத்தல்
- 10 கிராம் சீராகம்
- 2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- பெருங்காயம்
- உப்பு சுவைக்கேற்ப
- தாளிக்க தேவையானவை
- தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
- கடுகு சிறிதளவு
- கருவேப்பிலை
சிறிதளவு
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கொதமல்லி விதை, கடலை பருப்பு, துவரம் பருப்பு, சீரகம், வத்தல் ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் இதை ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் புளி போட்டு அதை ஊறவைத்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரதை வைத்து அதில் நறுக்கிய வெண்டைக்காய், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்து அதனுடன் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு மற்றும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து கலந்த போர் கலவையை சேர்த்து அதில் வெண்டைக்காய் போட்டு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
Fatty Liver Disease Symptoms: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் ஆபத்தில் இருக்குதுன்னு அர்த்தம்
இது நுரைகட்டி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதை மோர் குழம்பில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்படி செய்து எடுத்தால் சுவையான ரங்கராஜ் ஸ்டைலில் மோர்குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |