மாதம்பட்டி ரங்கராஜ்க்கு ஆப்பு வைத்த CWC- ஜாய் கிரிசில்டா காரணமா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருந்த மாதம்பட்டி ரங்கராஜ், இந்த வார நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாரா? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழும்பியுள்ளது.
குக் வித் கோமாளி 6
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது ஆறாவது சீசன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் சமையல் நிகழ்ச்சியில் குக்குகள்- கோமாளிகள் என இரண்டு பிரிவினர்கள் இருப்பார்கள். அத்துடன் சமையலுடன் கூடிய நகைச்சுவை இந்த நிகழ்ச்சியில் இருப்பதால் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இறுதி போட்டிகள் ஆரம்பம்
இந்த நிலையில், ஆறாவது சீசன் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் வேளையில், ராஜு, பிரியா ராமன், ஷபானா, நந்தகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் டாப் 5 போட்டியாளர்களாக இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து டாப் 5 போட்டியாளர்களுக்கும் இடையிலான போட்டிகள் நடைபெறவிருப்பதால் கடந்த சீசன்களில் கலந்து கொண்ட உமா ரியாஸ்கான், கனி, விஜே விஷால், மதுரை முத்து மற்றும் தர்ஷா குப்தா ஆகியோரும் இணையவுள்ளனர்.
இடைநிறுத்தம் செய்யப்பட்டாரா?
இதற்கிடையில் இந்த வாரம் வெளியாகிய ப்ரோமோவில் இரண்டு நடுவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மூன்றாவது நடுவரான மாதம்பட்டி ரங்கராஜ் ப்ரோமோவில் இல்லை. இதனால் இவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டாரா என இணையவாசிகள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டதால் ஜாய் கிரிசில்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக இருந்து வருகிறது. இதனால் அவரால் நிகழ்ச்சிக்கு பங்கம் வந்து விடுமோ என்ற பயத்தில் நிகழ்ச்சியில் இருந்து விலக்கியிருப்பார்கள் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |