மாதம்பட்டி ஐஸ்வர்யா ஸ்டைல் பருப்பு சாதம்.. இந்த பொருள் மட்டும் சேர்க்காதீங்க
மாதம்பட்டி சமையல் என கூறும் பொழுது நினைவிற்கு வருவது ரங்கராஜ் மற்றும் அவரின் சகோதரி ஐஸ்வர்யா தான்.
இருவரும் தன்னலம் பார்க்காமல் மாதம்பட்டி சமையலை உலகம் முழுவதும் கொண்டு சென்றிருக்கிறார்கள் என அவர்களின் தந்தை பேட்டியொன்றில் பேசியிருந்தார். மாதம்பட்டி சமையலின் சுவையை அடித்துக்கொள்ளவே முடியாது.
அப்படியாயின், வெறும் 10 நிமிடத்தில் மாதம்பட்டி ஐஸ்வர்யா ஸ்டைலில் எப்படி அரசி பருப்பு செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெய்
- தேங்காய்
- கடுகு
- சீரகம்
- கடலை பருப்பு
- சின்ன வெங்காயம்
- பெரிய வெங்காயம்
- பூண்டு
- இஞ்சி
- பச்சை மிளகாய்
- தக்காளி
- மஞ்சள் தூள்
- சாம்பார் பொடி
- சுடுதண்ணீர்
- துருவிய தேங்காய்
- அரிசி
- பருப்பு
அரிசி பருப்பு செய்வது எப்படி?
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் கொஞ்சமாக நெய் ஊற்றி, நெய் அதிகமாக எடுத்துக் கொள்ளாதவர்கள் தேங்காய் எண்ணெய் கொஞ்சமாக சேர்த்து, அதனுடன் கடுகு, சீரகம், கடலை பருப்பு ஆகிய அனைத்தும் எண்ணெய் பொறியும் சமயத்தில் வெட்டி வைத்திருக்கும் சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
அடுத்து, பெரிய வெங்காயம், தட்டிபோட்ட பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் சேர்த்து வதங்க விடவும்.
வதங்கி கொண்டிருக்கும் பொழுது கொஞ்சமாக கறிவேப்பிலை போடவும். வெங்காயம் வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து, மஞ்சள் தூள் கொஞ்சம் சேர்க்கவும்.
அடுப்பை கொஞ்சமாக குறைத்து விட்டு, சாம்பாடி பொடி தேவையான அளவு போட்டு கிளறி விடவும். நன்றாக கிளறி விட்டு மசாலா வதங்கிய பின்னர் சுடு தண்ணீர் 6 டம்பளர் ஊற்றவும்.
தண்ணீர் கொதித்து வரும் பொழுது அரிசி பருப்பை சேர்க்கவும். உப்பு சரியாக சேர்த்து, குக்கருக்கு விசில் வைத்து மூடி வைக்கவும்.
கடைசியாக மிளகு, சீரகத்தை இடித்து சாதம் மேல் தூவவும். அத்துடன் நறுக்கிய பூண்டு மற்றும் துருவிய தேங்காய் இரண்டையும் எண்ணெய்யில் லேசாக வறுத்து விட்டு, அதனையும் தூவவும். அனைத்தையும் சாதம் மேல் போட்டு தூவினால் கமகம வாசனையில் அரிசி பருப்பு சாதம் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |