potato sukka: நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் உருளைக்கிழங்கு சுக்கா
பொதுவாகவே அசைவ பிரியர்களாலும் விரும்ப்படும் சைவ உணவுகளின் பட்டியலில் உருளைக்கிழங்கு முக்கிய இடம் வகிக்கின்றது.
ஆனால் உடல் எடை அதிகரி்க்கும் என்ற பயத்தில் பலர் உருளைக்கிழங்கு சாப்பிடுவதையே தற்காலத்தில் தவிர்த்து வருகின்றார்கள். ஆனால் அதனை பெரித்து சாப்பிடும் போது மட்டுமே உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
உண்மையில், உருளைக்கிழங்கானது வைட்டமின் 'சி'யின் சிறந்த மூலமாகும். அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
மேலும் உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்கள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் செரிந்து காணப்படுகின்றது.
இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த உருளைக்கிழங்கை கொண்டு ஆரோக்கியமான முறையில் அனைவரும் விரும்பும் சுவையில், எவ்வாறு உருளைக்கிழங்கு சுக்கா செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
உருளைக் கிழங்கு - 3
பச்சைப் பட்டாணி - 2 தே.கரண்டி
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
கறிமசாலா தூள் - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
கொத்துமல்லி இலை - ஒரு கைப்பிடி
எலுமிச்சை சாறு - 1/2 தே.கரண்டி
கடலை மாவு - 1தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
எண்ணெய் - ஒரு தே.கரண்டி
பிரியாணி இலை - 1
சீரகம் - அரை தே.கரண்டி
உளுந்து - அரை தே.கரண்டி
கடலைப் பருப்பு - அரை தே.கரண்டி
முந்திரி - 5
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
வர மிளகாய் - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை
இந்த ரெசிபியை செய்ய முதல் நாள் இரவே பச்சைப் பட்டாணியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
மறுநாள் காலையில் பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்துக் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கு நன்றாக ஆறிய பின்னர், உருளைக்கிழங்கை கைகளால் பிசைந்து ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி ஒரு தட்டிற்கு மாற்றிக்டிகொள்ள வேண்டும்.பின்பு இஞ்சி மற்றும் பூண்டையும் தட்டி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறிவேப்பிலை, சீரகம், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து உளுந்து, கடலைப்பருப்பு, முந்திரி பருப்பு மற்றும் வரமிளகாயை ஆகியவற்றையும் அதில் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கிய பின்னர், இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
வெங்காயம் பொன்நிறமாக மாறியதும் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கிய பின்னர் மஞ்சள்தூள், கறிமசாலா மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் உருளைக் கிழங்கு,பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கி தேவையானத் தண்ணீர்,உப்பு சேர்த்து மிதமானத் தீயில் முடி வைத்து வேகவிட வேண்டும்.
நன்றாக வெந்ததன் பின்னர் 1 ஸ்பூன் அளவிற்கு கடலை மாவை சிறிது நீர் விட்டுக் கரைத்து மசாலாவில் ஊற்றினால் கிழங்கு தனித்தனியாக இல்லாமல் ஒன்றாகக் மிக்ஸ் ஆகிவரும்.
இந்த பதத்தில் நன்றாகக் கிளறி விட்டு சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டு,கொத்தமல்லியை தூவி இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் உருளைக்கிழங்கு சுக்கா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |