முதல் மனைவியுடன் மாதம்பட்டி ரங்கராஜ்: இரண்டு காதல்.. சர்ச்சையை கிளப்பிய ஜாய் கிரிஸில்டா!
சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாவது திருமணம் செய்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் ஜாய் தற்போது வெளியிட்டுள்ள இன்டாகிராம் பதிவு மீண்டும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
செலிபிரிட்டிகள், தொழிலதிபர்கள் என பலரது வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்துகொடுக்கும் பணியை சிறப்பாக செய்துவருகிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்கை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
அண்மையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
குறித்த திருமணம் கோவிலில் மிக எளிமையான பாரம்பரிய முறையில் நடைபெற்றுள்ளது. அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில் 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சர்சைக்கே இன்னும் முடிவு கிடைக்காத நிலையில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள பதிவில் நீங்கள் காதலை இரண்டாக கொடுத்தீர்கள் அக்கறையை இரண்டாக கொடுத்தீர்கள் நாங்கள் அதை ஒட்டுமொத்தமாக திருப்பி தருகின்றோம் என குறிபிட்டுள்ளார்.
இரண்டு காதல் என இவர் கூறுவது இவர் மற்றும் இவரின் குழந்தை பற்றியா? அல்லது ரங்கராஜின் முதல் மனைவி பற்றி என்ற குழப்பம் எழுந்துள்ளது.
