இவருக்கு என்னாச்சு? பார்க்கவே பரிதாபமாக மாறிய மாநகரம் பட நடிகர்- - பதறும் ரசிகர்கள்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தின் நாயகராக நடித்த ஸ்ரீ வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஸ்ரீ
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பிரலமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் ஸ்ரீ.
இவர், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான “வழக்கு எண் 18/9” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகராக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அதன் பின்னர், முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மாநகரம் திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான நிலையில் அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்காத ஸ்ரீ, கடந்த 2024-ம் ஆண்டு இறுகப்பற்று திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். அதில், பங்கேற்று 4-வது நாளில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். மற்ற நடிகர்கள் போல் அல்லாமல் ஸ்ரீ, தேர்வு செய்த படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களம் என்றாலும், அதிகமான படங்களில் நடிக்கவில்லை.
அடையாளம் தெரியாமல் மாறிய படங்கள்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் ஸ்ரீ அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் அரைகுறை ஆடையுடன், தலைமுடியை கலரிங் செய்து, எலும்புகள் தெரியும் அளவிற்கு உடல் மெலிந்து காணப்படுகிறார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் “உங்களுக்கு என்ன தான் ஆச்சு..” எனக் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்க்ள.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |