நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு இவ்ளோ பெரிய மகளா? வைரலாகும் புகைப்படங்கள்
எம்.எஸ்.பாஸ்கர் வீட்டில் அண்மையில் விசேஷம் நடைபெற்றது. இதில் அவர் மகள் மருமகன் மற்றும் பேரக்குழந்தையின் புகைப்படங்கள் வெளியாகின. இவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எம்.எஸ்.பாஸ்கர்
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் எம்.எஸ்.பாஸ்கர். நகைச்சுவையான கதாபாத்திரம் மட்டுமின்றி எமோஷனலான ரோல்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.
இவர் எம்.எஸ்.பாஸ்கர் கடந்த 1957 -ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்தார். தமிழகத்தில் நவீன நாடக நாடகங்களை நிகழ்த்திய 'புதிய நாடகத்திற்கான சங்கம்' என்ற தமிழ் நாடகக் குழுவில் உறுப்பினராக எம் எஸ் பாஸ்கர் இருந்தார்.

அதன் பின் தெலுங்கு மற்றும் ஆங்கில படங்களை தமிழில் டப்பிங் செய்து வந்தார்.90 களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த எம் எஸ் பாஸ்கருக்கு "எங்கள் அண்ணா" திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.
எம் எஸ் பாஸ்கர் "மொழி" படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதையும், 2017 ஆண்டு வெளிவந்த "8 தோட்டாக்கள்" படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதையும் வென்றார் .

இப்படி இருக்க எம் எஸ் பாஸ்கரனுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் 2021-ல் அகுள் சுதாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதன் பின்னர் கடந்த ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. எம்.எஸ்.பாஸ்கர் தாத்தாவானார். தன் பேத்திக்கு அகிரா என பெயரிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அகிராவின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.



| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |