மீன் எண்ணெய் மாத்திரை எடுத்துக்கொள்கிறீர்களா? இதை தெரிஞ்சுக்கோங்க
மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
மீன் எண்ணெய் மாத்திரை
காய்கறிகள் மற்றும் மீன்கள் எமது உடலுக்கு ஆரோக்கிய சத்துக்களை கொடுக்கக்கூடியது. கடலில் காணப்படும் கொழுப்பு நிறைந்த மீன்களில் அதிகமான பலனை கொண்டிருக்கிறது.
இதில் ஒமேகா -3 ஃபேட்டி ஆசிட்ஸ் , உடலில் இருக்கும் நல்ல கொழுப்பை மேம்படுத்துவதாகவும், ட்ரைகிளிசரைடுகளை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மீன் எண்ணெய் மாத்திரை எடுத்துக்கொள்ளும் போது இது 15% தீவிரமான இதயப்பிரச்சனையில் இருந்து பாதுகாக்கிறது.
ஆனால் இதயம் நோயாளிகளில் ஏற்கனவே சிக்கி இருக்கும் நோயாளிகள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளும் போது அது மாரடைப்பு, மோசமான இதய செயலிழப்பு அல்லது மரணம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பை முடிந்தவரை குறைக்கும்.
பொதுவாக மீன் எண்ணெயை அதிகமாக எடுத்து கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, ரத்த அழுத்தம் குறைவு, ஈறுகளில் ரத்த கசிவு மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.
இது தவிர குமட்டல், நெஞ்செரிச்சல் மற்றும் மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் ஏற்படும் டாக்ஸிக் ரியாக்ஷன்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.
கர்ப்பிணி பெண்கள் அழற்சி நிலைகளை தணிக்க அல்லது தங்களின் பொது ஆரோக்கியத்திற்காக மீன் எண்ணெயை எடுத்து கொள்ளலாம்.
மீன் எண்ணெய் மாத்திரை நீங்கள் எடுத்துக்கொள்ள இருந்தால் நீங்கள் இதயப்பிரச்சனையில் சிக்குண்டவராக இல்லை என்றால் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் குடிக்க வேண்டும்.