நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க
நுரையீரல் புற்றுநோய் உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது.
நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரலில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும்.
புகைபிடித்தல், நச்சு வாயுக்கள் மற்றும் மரபியல் காரணங்களால் இது ஏற்படுகிறது.
ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகள் சாதாரண சுவாச பிரச்சினைகளைப் போல இருப்பதால், பலருக்கு நோய் தாமதமாகவே கண்டறியப்படுகிறது.
ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால், குணமடையும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில், நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.
யாருக்கு அதிக ஆபத்து?
நேரடியாக அல்லது மறைமுகமாக புகைப்பிடிக்கும் புகைக்கு ஆளாகுபவர்கள்.
காற்று மாசுபாடு, அஸ்பெஸ்டாஸ், சிலிக்கா போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களுடன் பணிபுரிபவர்கள்.
நச்சு வாயுக்களுக்கு அடிக்கடி ஆளாகுபவர்கள்.
குடும்பத்தில் நுரையீரல் புற்றுநோய் வரலாறு உள்ளவர்கள்.
நீண்டகால நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள்.
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
- மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல்.
- இருமலுடன் ரத்தம் வருதல்.
- காரணமின்றி உடல் எடை குறைதல் மற்றும் பசி குறைதல்.
- நெஞ்சுவலி அல்லது மூச்சுத்திணறல்.
- மீண்டும் மீண்டும் நெஞ்சுத் தொற்று ஏற்படுதல்.
- தொடர்ந்து குரல் கரகரப்பாக இருப்பது அல்லது அதிக சோர்வு.
தடுப்பது எப்படி?
- புகைப்பிடிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும்.
- பிறர் புகையை சுவாசிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- காற்று மாசுபாடு மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
- நீடித்த இருமல் அல்லது சுவாசப் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.