அதிர்ஷ்டம் தரும் ஆடி செவ்வாய்.., 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் ராசிபலன்கள்
ஆடி மாதம், அம்மன் வழிபாடு, ஆடிப்பெருக்கு மற்றும் விவசாயப் பணிகளுக்கு மிகவும் உகந்த ஆன்மிகச் சிறப்புமிக்க மாதமாகும்.
அதேபோல், ஆடி செவ்வாய் என்பது அம்மன் வழிபாட்டிற்க, ஔவை நோன்பிற்கும், மற்றும் பெண்கள் விரதம் இருப்பதற்கும் உரிய மிகச் சிறப்பு வாய்ந்த நாளாகும்.
இந்நாளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்து, அம்மனை வழிபட்டு, கொழுக்கட்டை படைத்து விரதம் இருப்பார்கள்.
அந்தவகையில், ஆடி செய்வாயான இன்று 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
குடும்பத்தில் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சில பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குழந்தைகள் தொடர்பாக அலைச்சல் இருக்கும்.
அதிர்ஷ்டம்: திசை – கிழக்கு | எண் – 7 | நிறம் – வெளிர் மஞ்சள்
ரிஷபம்
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பணிச்சூழலில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். சேமிப்பு எண்ணம் அதிகரிக்கும். பொழுதுபோக்கால் செலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்டம்: திசை – மேற்கு | எண் – 8 | நிறம் – பொன்னிறம்
மிதுனம்
தந்தை வழி ஆதரவு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பயணத் திட்டங்கள் நிறைவேறும். வீடு, வாகன பராமரிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்டம்: திசை – வடக்கு | எண் – 5 | நிறம் – சாம்பல்
கடகம்
மனதில் தெளிவு ஏற்படும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் நீங்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டம்: திசை – மேற்கு | எண் – 1 | நிறம் – வெளிர் நீலம்
சிம்மம்
அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்லுங்கள். பணியில் இருந்த சிக்கல்கள் விலகும். பயணங்களால் சோர்வு ஏற்படும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்டம்: திசை – கிழக்கு | எண் – 7 | நிறம் – பச்சை
கன்னி
குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பணியிடத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்டம்: திசை – தென்மேற்கு | எண் – 8 | நிறம் – வெளிர் நீலம்
துலாம்
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பணியால் பயணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சாதகமான சூழல் உருவாகும். கணவன் மனைவி அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.
அதிர்ஷ்டம்: திசை – வடக்கு | எண் – 5 | நிறம் – இளம் சிவப்பு
விருச்சிகம்
முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். பொருளாதார நிலை மேம்படும். புதிய கூட்டாளிகள் தொடர்பான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் குறையும்.
அதிர்ஷ்டம்: திசை – தென்மேற்கு | எண் – 4 | நிறம் – ஊதா
தனுசு
உறவினர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். அரசு தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்டம்: திசை – வடமேற்கு | எண் – 7 | நிறம் – இளம் சிவப்பு
மகரம்
சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய இலக்குகள் உருவாகும். பூர்வீக சொத்துகள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
அதிர்ஷ்டம்: திசை – மேற்கு | எண் – 8 | நிறம் – பொன்னிறம்
கும்பம்
உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும். நண்பர்கள் காரணமாக அலைச்சல் இருக்கும்.
அதிர்ஷ்டம்: திசை – கிழக்கு | எண் – 7 | நிறம் – வெள்ளை
மீனம்
நட்பு வட்டம் விரிவடையும். சேமிப்பு குறித்த சிந்தனை அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் குறித்து நல்ல வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள்.
அதிர்ஷ்டம்: திசை – வடக்கு | எண் – 6 | நிறம் – சந்தன நிறம்