பள்ளி உணவில் இறந்து கிடந்த பாம்பு! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 110 மாணவர்கள்
அரசு பள்ளியில் பரிமாறப்பட்ட மதிய உணவில் பாம்பு இறந்து கிடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதிய உணவில் பாம்பு
பீகாரில் அராரியா மாவட்டத்தின் அமவுனா கிராமத்தில் இயங்கிவரும் அரசு உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நடுநிலை பள்ளியாக இருந்த இதனை சமீபத்தில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை வழக்கம் போல் மதியஉணவு கிச்சடி செய்து மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க, 98 மாணவர்கள் வருசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது கரண்டியால் கிச்சடியை அள்ளிய போது பாம்பு ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி போனதுடன், மாணவர்களும் கத்தி கூச்சலிட்டனர்.
இதில் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, பெற்றோர்கள் பள்ளியில் குவிந்துள்ளனர். சாப்பிட்டுக்கொண்டிருந்த 110 மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட கல்வி அதிகாரிகள் உணவை ஆய்வு செய்துள்ளனர்.
தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ள உணவில் தவறு இருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.