கரு இருள் சூழ வைக்கும் சந்திர கிரகணம்! எந்த எந்த நாடுகளுக்கு தென்படும் தெரியுமா?
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மிகப்பெரிய சந்திர கிரகணம் நடைப்பெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய சந்திர கிரகணம்
பொதுவாக ராகு, கேதுவின் ஆதிக்கம் சந்திர கிரகணத்தின் போது தான் அதிகமாக இருக்கும் என புராணங்கள் கூறுகிறது.
அந்த வகையில் அனைவரும் எதிர்பார்க்கும் சந்திர கிரகணம் இடம்பெற இருப்பதாக, இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கிரகணம் எதிர்வரும் 8ஆம் திகதி 5.48 முதல் 6.19 வரை இடம்பெறுகிறது.
எங்கு முடிவடையும் தெரியுமா?
இந்த நிலையில் குறித்த கிரணம் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு முழுமையாக பார்க்ககூடியதாகவுள்ளது.
இதனை தொடர்ந்து 8 ஆம் திகதி மாலைசந்திரன் உதயமாகும் என்பதுடன், சந்திர கிரகணத்தின் இறுதி பகுதியை மட்டும் இலங்கை மற்றும் இந்தியாவின் சென்னை பகுதியில் இருப்பவர்கள் பார்க்க கூடியதாய் இருக்குமாம்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள் குறித்த தினத்தில் வீட்டிற்கு ஏதாவது பூஜைகள் செய்வதாக இருந்தால் செய்து கொள்ளலாம் என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.