சுக்கிரன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கு பொற்காலம் தெரியுமா?
சுக்கிரன் ரிஷப ராசியில் பெயர்ச்சியடைந்துள்ள நிலையில், பொற்காலத்தை சந்திக்கும் 3 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சுக்கிரன் பெயர்ச்சி
ரிஷப ராசியின் அதிபதியாக இருக்கும் சுக்கிரன், செல்வம், அன்பு, அழகு, செழிப்பு மற்றும் பொருள் மகிழ்ச்சியின் அடையாளமாக கருதப்படுகின்றார்.
சுக்கிரன் பெயர்ச்சி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். தற்போது சுக்கிரன் ரிஷப ராசியில் தங்கியிருந்த நிலையில், அவர்களின் வலிமை இன்னும் அதிகமாகும்.
அத்தகைய சூழ்நிலையில், இந்த நிகழ்வு மற்ற ராசிகளை விட குறிப்பிட்ட ராசிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைவதால் கடகம், மகரம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பு நன்மைகளைத் தரும்.
கடகம்
கடக ராசியினர் இந்த பெயர்ச்சியினால் வருமானம் அதிகரிப்பதுடன், நிதி நெருக்கடியும் சமாளிக்கப்படுமாம். இந்த நேரத்தில் கூட்டாக எந்த வேலையும் செய்வது லாபகரமான ஒப்பந்தமாக இருக்குமாம்.
ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து நல்ல வருமானத்தைப் பெறத் தொடங்குவீர்கள். காதல் வாழ்க்கையிலும் சாதகமான சூழல் இருப்பதுடன், வாழ்க்கை துணையுடனும் நெருக்கம் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியின் 5வது வீடான சுக்கிரன் பெயர்ச்சியால், குழந்தை பாக்கியம் பெறுவதுடன், நல்ல செய்தியும் கேட்கலாம். எதிர்காலத்தில் மாணவர்களின் படைப்பாற்றல் சிறந்த பயனை அளிக்கும்.
சொத்து அல்லது ஆடம்பரப் பொருட்களில் முதலீடு செய்வீர்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கையிலும் இனிமையான அனுபவங்களைப் பெறுவீர்கள்.
மீனம்
மீன ராசியினருக்கு சுக்கிரனின் ஆசி இருப்பதுடன், இந்த நாட்களில் பணம் குவியவும் செய்யும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறன்கள் வளர்வதுடன், தங்களது உணர்வுகளை பயமின்றி வெளிப்படுத்தவும் முடியுமாம்.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபரிடம் பேசுவதை நிறுத்திவிட்டால், உரையாடலை மீண்டும் தொடங்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய நண்பர்களைச் சந்திப்பது வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |