சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் ராகு இந்த ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம் உங்க ராசி இருக்கா?
ராகு பெயர்ச்சியின் காரணமாக எந்தெந்த ராசியினர் நன்மையை பெறுகின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ராகு பெயர்ச்சி
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. மேலும் ஒவ்வொரு கிரகங்களுக்கும் சில ராசிகள் பிடித்தமான ராசியாகவும் இருக்கின்றது.
ஆதலால் இந்த ராசிகளின் கிரக நிலையிலனால் அதிர்ஷ்டம், செல்வம் என அனைத்தும் கிடைக்கும். இந்நிலையல் ராகு பகவான் மார்ச் இறுதியில் ராகு பகவான் தனது சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திற்கு பெயர்ச்சியடைகின்றார்.

இந்நிலையில் ராகு பகவானால் அதிர்ஷ்டம் கிடைக்கும் ராசிகளை இங்கு கீழே காணலாம்.
மேஷம்
ராகுவின் இந்த மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு இது ஒரு அதிர்ஷட காலமாக இருக்கும். இவர்கள் நீண்ட காலமாக தடைபட்டு இருந்த வேலைகள் வெற்றியை தரும். மேலும் தொழில் செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இது மட்டுமின்றி வணிகத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமாணம் கிடைக்கும். பல நாட்களாக தடைபட்டிருந்த பணம் இந்த மாற்றத்தால் இவர்களுக்கு கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றத்தால் இவர்களின் செல்வமும், வீரமும் அதிகமாகும். இவர்கள் தங்கள் பேச்சினால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை புத்திசாலித்தனமாக செய்து முடிப்பார்கள். பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் எதிரியை தோற்கடிக்கும் காலமாக இருக்கும். இவர்கள் நீண்ட வருஷமாக எதிர்கொண்ட பிரச்சனை முடிவடையும் காலமாக கருதப்படுகிறது.

கும்பம்
இவர்கள் தங்கள் எதிர்பார்த்திராத நிறைய நன்மைகளை அடைவார்கள். இவர்களுக்கு லாட்டரி மூலம் பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தங்கள் குடும்ப சொத்தில் நல்ல பங்கு கிடைக்கும் தாங்கள் காத்துக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். இவர்கள் நிதி நிலையில் நல்ல உயர்வு கிடைக்கும். அது மட்டுமின்றி இந்த ராசிக்காரர்கள் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு நிறைய உள்ளது. தாங்கள் எதிர்காலத்தில் செய்யப்போகும் தொழிலுக்கு இன்றே முயற்சிகள் எடுத்தால் அது வெற்றியை தரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |