சிம்ம ராசிக்குள் நுழையும் சுக்கிரன்... எந்தெந்த ராசியினருக்கு ராஜயோகம் தெரியுமா?
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் எந்த ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம்.
சுக்கிரன் பெயர்ச்சி
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. மிகவும் சக்திவாய்ந்த மற்றும் நேர்மறையான கிரகங்களில் ஒருவராக இருப்பவர் தான் சுக்கிரன்.
அழகு, காதல், ஆடம்பரம், நிதி இவற்றிற்கான கிரகமாக இருக்கும் சுக்கிரன் நீர் ராசியான கடக ராசிக்கு நுழைகின்றார்.

அந்த வகையில் சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தினை பெறும் ராசியினர் யார் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.
மிதுனம்
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்லும் நிலையில் மிதுன ராசியினருக்கு அதிகமான பலன் கிடைக்கப் போகின்றது. தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவதுடன், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளை பெறுவீர்கள்.
வேலையின்றி தவிப்பவர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு கூடுதலான பொறுப்பும் கிடைக்குமாம்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சியினால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் நிலையில், தாங்கள் செய்யும் வேலையினால் அதிக திருப்தி அடைவார்களாம்.
வணிக ரீதியாக இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதுடன், நிதி நிலைமையும் நிலையாக இருக்கும். தங்களது வருமானத்தில் கூடுதல் முன்னேற்றம் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியினருக்கு செல்வம் தேடி வருவதுடன், புதிய முதலீடுகள் இவர்களுக்கு வெற்றியை அளிக்குமாம். தங்கள் இலக்குகளை அடைவதற்கு இந்த தருணம் மிகவும் சரியானதாக கருதப்படுகின்றது.
இவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்த உதவும் செல்வந்தர்கள் வரும் காலமாகவும் கருதப்படுகின்றது. தங்களது வேலையினால் மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |