குரு பெயர்ச்சியால் பண மழையில் 5 அதிர்ஷ்ட ராசிகள்... உங்க ராசியும் இருக்குதா?
குருபகவான் பூச நட்சத்திரத்தில் நுழைந்துள்ள நிலையில் எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டம் பெறுவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குரு பெயர்ச்சி
ஜோதிடத்தில் அறிவு, ஞானம், செல்வம், குழந்தை பாக்கியம், திருமணம் என சுப காரியங்களுக்கு அதிபதியாக திகழ்பவர் தான் குருபகவான்.
நற்பலன் தரும் நட்சத்திரத்தில் குரு பிரவேசிக்கும் போது பொருளாதார ரீதியாகவும், குடும்பம் மற்றும் தொழில் ரீதியாகவும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
அந்த வகையில் கடக ராசியில் உச்சம் பெற்றுள்ள குரு ஜுலை 4ம் தேதியில் பூசம் நட்சத்திரத்தின் 2ம் பாதத்திற்குள் நுழைந்துள்ளார்.
நட்சத்திரங்களின் சுப நட்சத்திரமாக கருதப்படும் பூச நட்சத்திரத்தின் 2ம் பாதம் ஒருவரது பொருளாதார நிலையில் பெருக்கத்தை குறிக்கின்றது.
ஜுலை 19ம் தேதி வரை குருபகவான் பூச நட்சத்திரத்தில் நீடிப்பதால் எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டமாக இருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு குருவின் இந்த நட்சத்திர மாற்றம் தைரியம், தன்னம்பிக்கை, புதிய வாய்ப்புகளை அள்ளித்தருகின்றது.
வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு தொழில் விரிவடைவதுடன், பயணங்கள் நல்ல லாபத்தினை தேடித்தருமாம். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைப்பதுடன், நீண்ட நாட்களாகத் திட்டமிட்ட காரியங்கள் வெற்றியாக மாறும்.

கடகம்
கடக ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியானது பலமடங்கு செல்வாக்கை அதிகரிக்கின்றது. தாழ்வு மனப்பான்மை நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், நீண்ட நாட்களாக தடைபட்டு இருந்த காரியங்கள் சிறப்பாக முடியும்.
தொழில், உத்தியோகம் இவற்றில் நல்லதொரு வாய்ப்புகள் தேடி வருவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதியும் நிலைத்திருக்கும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தை பெறுவீர்கள்.

கன்னி
கன்னி ராசியினர் இந்த குரு நட்சத்திர பெயர்ச்சியினால் பணவரவு அதிகமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகுவதுடன், நீண்ட நாட்கள் வராமல் இருந்த பணம் கை வந்து சேரும்.
வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், அதற்கேற்ற மரியாதையும் தேடி வரும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு இது சாதகமான சூழல் ஆகும். சமூகத்தில் மதிப்பு, பெரிய நபர்களின் ஆதாரவும் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினர் தொட்டதெல்லாம் துலங்கும் நேரம் இதுவாகும். கடின உழைப்பிற்கான பலனையும், அங்கீகாரத்தையும் பெறுவீர்கள்.
ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தூர தேசம் அல்லது வெளிநாடு பயணம் தொடர்பாக நல்ல செய்தி வந்து சேரும்.
வேலையில் பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பும், உயர் அதிகாரிகளின் பாராட்டு மற்றும் ஒத்துழைப்பினை பெறுவீர்கள்.

மீனம்
மீன ராசியினர் இந்த குரு நட்சத்திர பெயர்ச்சியினால் பிள்ளைகளின் தேர்வு, அவர்களின் முதலீடுகள் சார்ந்த விடயங்கள் சிறப்பான நற்பலன்களை கொடுக்கும்.
கலை மற்றும் படைப்பு துறையில் இருப்பவர்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைப்பதுடன், புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இவை சாதகமான காலமாக அமையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |