மச்சம் எந்த நிறத்தில் இருந்தால் அதிர்ஷ்டம்: உங்களுக்கும் இருக்கா?
நமது எண்கள், ராசிகள் போன்று உடம்பில் இருக்கும் மச்சங்களுக்கும் ஜோதிட சாஸ்த்திரத்தில் பலன்கள் இருக்கிறது.
அந்த வகையில், ஒருவருக்கு அடர் கருப்பு நிறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுடைய வாழ்க்கை பிறப்பு முதல் இறப்புவரை சிறப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.
அதே சமயம், கறுப்பு நிறம் ஆழ்ந்தில்லாமல் சற்று லேசாக இருப்பவர்களுக்கு அமைதியற்ற நிலையில் தான் வாழ்க்கை அமையும்.
இது போன்று வேறு என்னென்ன நிறங்களில் மச்சம் இருந்தால் பலன்கள் அதிகமாக இருக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
சாம்பல் நிறம்
மற்ற நிறங்களை விட சாம்பல் நிறத்தில் மச்சம் உள்ளவர்கள் கலைத்துறையில் சாதிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களின் வருமானம் கோடிகளில் இருக்கும். அப்படி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் வறுமை இருக்கும். பழுப்பு நிறம். நம்மிள் பலருக்கும் மச்சம் பழுப்பு நிறத்தில் இருக்கும். இவர்கள் அவர்களின் வாழ்க்கையில் சில முடிவுகளை தீர்க்கமாக எடுப்பார்கள் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
இளஞ்சிவப்பு நிறம்
இளஞ்சிவப்பு நிறத்தில் மச்சம் இருந்தால் அது வெள்ளையான சருமம் கொண்டவர்களுக்கு மாத்திரம் தான் வெளியில் தெரியும். இவர்கள் மகான்களாக, கல்வியாளர், விஞ்ஞானியாகப் புகழ்பெறுவார்களாக இருப்பார்கள். அவர்களுடைய கல்வி அவர்களுக்கு கைக் கொடுத்து வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
வெண்மை நிறம்
வெண்மை நிறத்தில் மச்சம் இருப்பது அரிதாக இருக்கும். இதனை கருப்பாக இருப்பவர்களிடம் அடையாளம் காணலாம். இவர்கள் மற்றவர்களை விட பலம் கொண்டவர்களாவும், துணிச்சல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு இருக்கும் திறமையை வாழ்க்கைக்கு கைக் கொடுக்கும்.
சற்று நீல நிறம்
சற்று நீல நிறத்தில் மச்சம் இருப்பது அரிதானது. அப்படி இருப்பவர்கள் பழைய காலத்து விடயங்களை விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அதிகமான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதனை பயன்படுத்திக் கொண்டால் வணிகத்துறையில் சாதிக்கலாம்.
குங்கும நிறம்
குங்கும நிறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் உல்லாச வாழ்க்கை வாழ விரும்புவார்கள். அது கொஞ்சம் மஞ்சள் நிறமாக இருந்தால் அவர்கள் அதிகமான நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |