கையில் இந்த 3 ரேகை அமைப்பு இருக்கிறதா? இவர்கள் மன்னர்களை போல வாழ்வார்கள்
கைகளில் குறிப்பிட்ட அதிர்ஷ்ட ரேகைகள் இருந்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் அளவற்ற மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று கூறப்படுகின்றது.

அதிர்ஷ்ட ரேகை ஜோதிடம்
கைரேகை சாஸ்திரத்தின்படி, நம் கைகளில் உள்ள ரேகைகள் நமது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் தன்மை கொண்டது எனப்படுகின்றது. இந்த ரேகைகள் மூலம் நமது உதிர்காலத்தை கணிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.
நம் கைகளில் ஆயுள் ரேகை, படிப்பு ரேகை, இதய ரேகை, திருமண ரேகை எனப் பல ரேகைகள் உள்ளன. ஆனால், எல்லாவற்றிலும் மிக முக்கியமானது விதி ரேகை ஆகும். இந்த ரேகை ஒரு நபரின் எதிர்காலம், தொழில், முன்னேற்றம் மற்றும் நிதி வாழ்க்கை பற்றி கூறுகிறது.
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான விதி ரேகை உள்ளது. எந்த வகையான விதி ரேகை ஒருவரை வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செல்வத்தை கொடுத்து மன்னர்களை போல வாழ வைக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

விதி ரேகை
விதி ரேகை உள்ளங்கையின் அடிப்பகுதியில், அதாவது மணிக்கட்டின் நடுவில் தொடங்கி, நடுவிரலுக்குக் கீழே அமைந்துள்ள சனி மேடு வரை உள்ளங்கை வழியாகச் செல்கிறது. இந்த ரேகை தொழில், வெற்றி மற்றும் செல்வத்தைக் குறிக்கிறது. இந்த விதி ரேகையில் குறிப்பிட்ட சில ரேகைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நடுவிரல் அடிப்பகுதி வரை செல்லும் விதி ரேகை
மணிக்கட்டில் தொடங்கி, நடுவிரலின் அடிப்பகுதி வரை தெளிவாகவும் நேராகவும் செல்லும் விதி ரேகையைக் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் எனப்படுகின்றது. இவர்கள் எதிலும் மகத்தான வெற்றியை அடைவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் பரம்பரைச் சொத்துக்களாலும் பெரிதும் பயனடைவதோடு, ஒரு தனித்துவமான சமூக அந்தஸ்தையும் பெறுவதற்கு பிறப்பெடுத்தர்கள் எனப்படுகின்றது.

ஆயுள் ரேகையிலிருந்து தோன்றும் விதி ரேகை
விதி ரேகை ஆயுள் ரேகையிலிருந்து நீண்டு சென்றால், அந்த நபர் தனது கடின உழைப்பு மற்றும் திறமையின் மூலம் வாழ்க்கையில் பெரும் உச்சத்தை அடைவார் என்று அர்த்தம். காலப்போக்கில் அத்தகையவர்களுக்கு செல்வத்திற்குக் குறை இருக்காது எனப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)