Numerology: அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் பொருட்கள்.. இனி வைச்சுகோங்க
பொதுவாக சிலரின் வாழ்க்கை கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவை போன்று அமைந்திருக்கும். ஏனெனின் இவர்கள் பிறந்த எண் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
அதே சமயம் அவர்களின் வாழ்க்கையின் இலட்சியங்களையும் நிறைவேற்றும். கண்ணுக்குத் தெரியாத ஆன்மீக சக்தியில் நமது செயல்கள் நல்லவையாக மாற்றப்படுகிறது.
ஜோதிடத்தில் ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் இவைகளுடன் மேற்குறிப்பிட்ட எண்கணிதமும் தாக்கம் செலுத்துகிறது.
ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருந்தாலும் சில மாதங்களில் பிறந்தவர்களுக்கு இறைவன் துணையாக இருப்பார்.
நியூமராலஜி படி, குறிப்பிட்ட சில எண்களில் பிறந்தவர்கள் சில பொருட்களை பக்கத்தில் வைத்து கொண்டால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் அளவுக்கு அதிகமாக கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அப்படியாயின், என்னென்ன தேதிகளில் பிறந்தவர்கள் என்னென்ன பொருட்களை வைத்து கொள்ள வேண்டும் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
அதிர்ஷ்டம் தரும் பொருட்கள்

| 1 | மோதிரம், வளையல், பைகளில் காப்பர் நாணயங்கள் வைத்து கொண்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும். |
| 2 | வெள்ளி ஆபரணங்கள் அல்லது வெள்ளி நாணயம் வைத்து கொள்ளலாம். |
| 3 | தினமும் குளிக்கும் பொழுது நீரில் மஞ்சள் தூள் கொஞ்சமாக கலந்து குளிக்க வேண்டும். |
| 4 | பையில் 4 மிளகை சிறிய துணியில் கட்டி வைத்திருக்கவும். இது உங்களுக்கான அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். |
| 5 | ஏலக்காய் 5 உங்களுடைய பையில் வைத்து கொள்ளுங்கள். இது உங்களுடைய பிரச்சினைகளை சரிச் செய்ய உதவியாக இருக்கும். |
| 6 | அதிர்ஷ்டக்கதவு திறக்க வேண்டும் என பிராத்தணையில் இருப்பவர்கள் பர்ஸ் அல்லது பணம் வைக்கும் பையில் 2 துண்டு பட்டையை வைத்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு தேவையானவற்றை தேடிக் கொடுக்கும். |
| 7 | ஒரு மெட்டல் ஸ்டாப் கொண்ட கைக்கடிகாரத்தை அணிந்திருப்பது அவசியம். இது தான் உங்களுக்கான நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கும். |
| 8 | மயிலிறகை வைத்திருப்பது குறித்து பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருந்தாலும் எண் 8-ல் பிறந்தவர்கள் வைத்திருக்கும் பொழுது, செல்வம் அதிகரிக்கும். |
| 9 | குங்குமப்பூவை வைத்துக் கொள்வது நல்லது. |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |