இந்த விடயங்கள் கனவில் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்... என்னென்ன தெரியுமா?
இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது. ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை குறிக்கின்றன.
கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும் அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது ஆபத்து இது குறித்து ஆழ் மனம் எச்சரிப்பதாக அமைகின்றது.
அந்த வகையில் கனவு சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில விடயங்களை கனவில் பார்ப்பது அதிர்ஷ்ம் கொடுக்கும். அப்படிப்பட்ட கனவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தண்ணீர்
கனவு சாஸ்திரத்தின் அடிப்படையில் கனவில் தண்ணீரை கண்டாலோ அல்லது நதி, குளம் போன்ற இடங்களில் நீந்துவதை கண்டாலோ அது உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுப்பதாக அமையும்.
கனவில் தண்ணீரை காண்பது செழிப்பு மற்றும் வெற்றியின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றது. கனவில் மழையை கண்பது பண வரவை குறிக்கின்றது. இவ்வாறான கனவுகள் லட்சுமியின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருப்பதன் அடையாளமாக கருதப்படுகின்றது.
மாம்பழம்
கனவில் மாம்பழத்தை பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்ததாக கருதப்படுகின்றது. இந்த கனவு வருகின்றது என்றால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்ககப்போகின்றது என அர்த்தம்.
மாம்பழம் கனவில் வந்தால் அந்த கனவை வெளியில் யாரிடமும் பகிரக்கூடாது என கனவு சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. காரணம் மாம்பழம் பற்றிய கனவு பாரிய முன்னேற்றம் ஏற்படப்போவதன் அறிகுறியாக கருதப்படுகின்றது.
மதம் சார்ந்த பயணம்
கனவு சாஸ்திரத்தின் அடிப்படையில் மதம் சார்ந்த பயணம் மேற்கொள்வது போன்ற கனவு வருவது மிகுந்த அதிர்ஷ்டத்தை குறிக்கின்றது.இறைவனின் முழுமையான ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கின்றது என்பதே இதன் அர்த்தம்.
தாமரை மலர்
உங்கள் கனவில் தாமரை மலரைக் கண்பது வாழ்வில் மகிழ்சியான காலம் ஆரம்பமாக போகின்றது என்பதையே குறிக்கின்றது. நீண்ட நாட்கள் உங்களை கஷ்டப்படுத்திய பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படப்போகின்றது என்பதே இந்த கனவி்ன் அர்த்தமாகும்.
புல்லாங்குழல்
கனவில் புல்லாங்குழலைப் பார்த்தாலோ அல்லது நீங்கள் புல்லாங்குழல் வாசிப்பதை போன்று கனவில் பார்த்தாலோ மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது. இந்த கனவு வருகிறது என்றால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வரப்போகின்றது என்று அர்த்தம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |