குப்பை தொட்டி பாஸ்புக்கால் மகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் - நடந்தது என்ன?
எக்செசில் ஹினோஜோசா என்ற நபர் தனது வீட்டின் குப்பை தொட்டியில் இறந் தன் தந்தையின் பழைய வங்கி கணக்கு புத்தகதை கண்டெடுத்துள்ளார். இதனால் அவரக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
பழைய வங்கி கணக்கு புத்தகம்
சிலி நாட்டை சேர்ந்த எக்செசில் ஹினோஜோசா எனும் நபர் இறந்த தன் தந்தையின் பழைய வங்கி கணக்கு புத்தகத்தை குப்பை தொட்டியில் இருந்து எடுத்துள்ளார்.
இதன் பின்னர் அவர் கோடீஷ்வரரானார் என தகவல் வெளியாகி இருக்கிறது. 62 ஆண்டுகள் பழமையான அந்த பாஸ்புக், கோடிக்கணக்கான ரூபாய்களை எக்செசில் ஹினோஜோசாவிற்கு கொடுத்தது.
இதற்கு காரணம் 1960-70களில் வீடு வாங்குவதற்காக ஹினோஜோசாவின் தந்தை சுமார் ரூ.1.40 லட்சத்தை தனது வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார்.

அந்த நேரத்தில் இரு பெரிய தொகையாக இருந்துள்ளது. இதன் பின்னர் இவர் சில ஆண்டுகளில் இறந்துவிட்டார். மேலும் அவரது வங்கிக் கணக்கு பற்றி குடும்பத்தில் உள்ள எந்த உறுப்பினருக்கும் தெரியாமல் இருந்தது.
இந்த நேரத்தில் தான் இவரது மகன் அவரது இடத்தில் உள்ள குப்பை தொட்டியை சுத்தம் செய்யும் போது இந்த பாஸ் புத்தகத்தை கண்டெடுத்துள்ளார்.
முதலில் இந்த பாஸ்புக் அவ்வளவு முக்கியமானதாக ஹினோஜோசாவிற்கு தோனறவில்லை. காரணம் அந்த பாஸ்புக் வைத்திருந்த வங்கி ஏற்கனவே மூடப்பட்டிருந்தது.

இருந்தாலும் ஹினோஜோசா பாஸ்புக்கில் உள்ள 'மாநில உத்தரவாதம்' (State Guarantee) என்பதை கவனித்தார். அதாவது வங்கி திவாலானால், அரசாங்கம் பணத்தைத் திருப்பித் தரும் என்று அதற்கு அர்த்தம்.
இதை படித்த பிறகு, ஹினோஜோசா மகிழ்ச்சியடைந்தார். இதன்படி என்னுடைய தந்தை கஷ்டப்பட்டு உழைத்த பணம் என்றும், வங்கி திவால் ஆனாலும் அந்த பணத்திற்கு அரசு பொறுப்பு என்றும் கூறப்பட்டிருப்பதால், இந்த பணத்தை அவரது வாரிசாகிய எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதன் படி நீதிமன்றமும் வட்டியுடன் அந்த பணத்தை அவருக்கு வழங்க உத்தரவிட்டது. இதன்படி அவர் 9கோடியை பணமாக பெற்றுக்கொண்டார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |