eKYC Update செய்வது எப்படி? எளிமையான விளக்கங்களுடன்
Gas Cylinder eKYC Update Details: சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோர் கண்டிப்பாக eKYC நிறைவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் eKYC நிறைவு செய்யாவிட்டால், அவர்களுக்கு சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர்
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.957.50-க்கும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.2906-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டருக்கு எரிவாயு நிரப்புதல், மானியம் மற்றும் பிற சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், நுகர்வோரை ஆதார் அடிப்படையிலான eKYC சரிபார்ப்பை முடிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
எனவே, சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள், எரிவாயு சிலிண்டருக்கான eKYC-ஐ முடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், முன்னதாக eKYC சரிபார்ப்பை முடித்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படி செய்வது?
சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்கள், அந்ததந்த கேஸ் நிறுவனங்களின் (இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்) செயலி அல்லது இணையதளம் வாயிலாக eKYC சரிபார்ப்பை முடிக்கலாம்.
Indane சிலிண்டர் பயன்படுத்துவோர் indianoil one செயலியையும், பாரத் கேஸ் பயன்படுத்துவோர் hello bpcl செயலியையும், HP கேஸ் பயன்படுத்துவோர் hp pay என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- செயலியை பதிவிறக்கம் செய்த பின், செல்போன் எண் மற்றும் நுகர்வோர் எண் ஆகியவற்றை உள்ளிடவும். பின்னர் Update eKYC என்பதை Click செய்து, உங்கள் 12 இலக்கு எண் கொண்ட ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
- அடுத்து Play Store-யில் இருந்து AadhaarFaceRD செயலியை உங்கள் செல்போனில் Install செய்துகொள்ளுங்கள்.
- உங்கள் முகத்தை Scan செய்து ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.
- Online-யில் முடிக்க தெரியாதவர்கள், சிலிண்டர் விநியோகம் செய்யும் நபர்கள் மூலமே அல்லது எரிவாயு நிறுவனத்திற்கு நேரடியாக சென்றும் eKYC-ஐ முடிக்கலாம்.
இந்த பணியை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் முடிக்காவிட்டால், உங்களுக்கு சிலிண்டர் முன்பதிவு செய்வதிலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிலிண்டர் பெறுவதிலும் சிக்கல் ஏற்படலாம்.
