ஜியோவின் மெகா ஆஃபர்.. குறைந்த கட்டணத்தில் 5ஜி சேவை
ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை குறைந்த கட்டணத்தில் பெறுவதற்கு மெகா ஆஃபரை வெளியிட்டுள்ளது.
ஜியோ
இந்தியாவின் முன்னணி நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
இதனை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருவதற்கு காரணம், இதன் மலிவான விலையாகும். இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களின் கட்டணங்கள் தாறுமாறாக அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியில் காணப்பட்ட போது, ஜியோ தனது 5ஜி சேவையை குறைந்த கட்டணத்தில் கொடுத்தது.
தற்போதைய திட்டம் என்ன?
அன்லிமிடெட் 5G சேவை 239 ரூபாய் அல்லது அதற்கு அதிகமான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ரூ. 200க்கும் குறைவான கட்டணத்தில் 5ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி 198 ரூபாய்க்கு தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 5G சேவை, 14 நாட்கள் கால அவகாசம், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 SMS ஆகிய சேவைகள் இந்த திட்டத்தில் அடங்கும்.
மேலும் இந்த பிளானுடன் ஜியோ சினிமா, ஜியோ டிவி ஆகியவற்றையும் காணலாம். பிரீமியம் சலுகைகள் இதில் இல்லையென்றாலும், கிரிக்கெட் போட்டிகளை லைவ்வில் பார்க்க முடியும்.
இதன் வேலிடிட்டி குறைவாக இருந்தாலும் என்றாலும், 5ஜி சேவை 200க்கும் குறைவான கட்டணத்தில் கிடைப்பதால் இத்திட்டம் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
ஜியோவின் மற்றொரு சேவைக்கான கட்டணம் ரூ.349 ஆகும். இதில் 28 நாட்கள் கால அளவு, அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்.
தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 SMS ஆகிய சேவைகளும் இத்திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |