அறிமுகமான புதிய ஸ்மார்ட் வாட்ச்... 27 நாட்கள் வரை தாங்கும் பேட்டரி லைஃப்
Amazfit நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட் வாட்ச்சான T-Rex 3-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Amazfit ஸ்மார்ட் வாட்ச்
Amazfit நிறுவனம் தங்களது புதிய ஸ்மார்ட் வாட்சை செப்டம்பர் மாதம் 27ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்வாட்சின் விலையானது ரூ.19,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் 480 × 480 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 2,000 nits பீக் பிரைட்னஸ் கொண்ட சர்குலர் 1.5-இன்ச் AMOLED டச் ஸ்கிரீனைக் கொண்டுள்ளது.
ZeppOS 4-ல் இயங்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச், 10 ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் மிலிட்டரி கிரேட் பில்ட்டுடன் வந்துள்ளது.
மேலும் இது OpenAI-ன் GPT-4o AI அசிஸ்டென்ட் மற்றும் GPS கனெக்டிவிட்டிக்கான சப்போர்ட்டுடன் காணப்படுகின்றது. iOS 14.0 அல்லது ஆன்ட்ராய்டு 7.0 இயங்கும் ஸ்மார்ட்போன்கள் இதைப் பயன்படுத்தலாம்.
இதயத் துடிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவையும் கண்காணிக்க உதவும் BioTracker PPG பயோமெட்ரிக் சென்சார் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
Amazfit T-Rex 3 ஒரு முழுமையான இன்டகிரேடட் AI சிஸ்டமுடன் இயங்கும் முதல் ஸ்மார் வாட்ச் ஆகும். இந்த ஸ்மார்ட் வாட்சில் 700 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமான பயன்பாட்டுடன் 27 நாட்கள் வரை பேட்டரி லைஃபை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரம் பேட்டரி-சேவர் செட்டிங்கில் வைத்து நீங்கள் பயன்படுத்தினால் சுமார் 40 நாட்கள் வரை பேட்டரி லைஃபை எதிர்பார்க்கலாம். 100 மீட்டர் வரை நீரில் மூழ்கினாலும் சேதம் ஏற்படாமல் இருக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |