உடலில் புரதச்சத்து குறைந்தால் ஏற்படும் அறிகுறிகள் என்ன?
புரததச்சத்து ஒரு முக்கியமான மக்ரோனூட்ரியண்ட் ஆகும். இது உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது தசைகள், தோல், முடி மற்றும் நகங்கள் உள்ளிட்ட திசுக்களின் பழுது மற்றும் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம்.
புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனவை, இவை நமது உடலின் செல்கள் மற்றும் திசுக்களின் கட்டுமானத் தொகுதிகள்.
நாம் போதுமான புரத உட்கொள்ளல் இல்லாமல், உடல் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். புரதக் குறைபாட்டின் அறிகுறிகளை உடலில் எப்படி கண்டுபிடிப்பது அதற்கான தீர்க்கும் வழிமறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
புரதக்குறைபாடு
உணவினால் சரியான புரசத்து உடலுக்கு கிடைக்காமல் இருப்பது தான் முக்கிய காரணமாகும். இந்த காரத்தினால் தான் தற்போது 30 வயது ஆகும் முன்னரே உடலில் புரதச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
தசை, சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணமாக இருப்பது புரதம். தசை வலிமை அதிகரிக்க, உடல் எடை குறைக்க புரதம் அவசியம். உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் என்சைம்ஸ் தயாராக, புரதம் வேண்டும். இந்த சத்து உடலில் குறைந்தால் இது பல அறிகுறிகள் மூலம் அதை காட்டும்.
கொழுப்பு கல்லீரல்
கொழுப்பு கல்லீரல் புரதக் குறைபாட்டைக் குறிக்கிறது.அதாவது நமது உடலில் கல்லீரல் பகுதியில் முதலில் கொழுப்பு சேர ஆரம்பமாகும். இதனால் குடலில் இருக்கும் பாக்டீரியா மற்றும் செல்களில் ஏற்படும் மாற்றங்களால் லிப்போபுரோட்டீன்கள் அல்லது கொழுப்பைக் கடத்தும் புரதங்கள் சரியாகச்செயற்படாது.இது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
தோல் வீக்கம்
புரதக் குறைபாடு காரணமாக, தோலில் வீக்கம் ஏற்படுகிறது. இது எடிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் வந்தால் பல சமயங்களில் பெண்களுக்கு கை கால்களில் வீக்கம் காணப்படும். இந்த நிலையில் தான் உடல் திசுக்களில் திரவம் ஒன்றாக்கப்படும்.
இதற்குக் காரணம், இரத்தத்தில் காணப்படும் அதிகப் புரதமான அல்புமின் அளவு குறைவாக இருப்பதுதான். இந்த அல்புமினின் செயல்பாடு இரத்த ஓட்டத்தில் திரவத்தை ஈர்க்கும் அழுத்தத்தை பராமரிக்கும்.
புரதத்தின் அளவு குறையும் போது திரவம் இரத்த ஓட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு பதிலாக திசுக்களில் சேகரிக்கப்படுகிறது. இதன் காரணமாக பாதங்கள், முழங்கால்கள் மற்றும் கைகளில் வீக்கம் காணப்படுகிறது.
தோல் மற்றும் முடி பிரச்சனைகள்
புரோட்டீன் குறைபாடு காரணமாக, தோல், முடி மற்றும் நகங்களில் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. புரோட்டீன் குறைபாடு காரணமாக, முடி வளர்ச்சி நின்று, அவற்றின் அமைப்பும் மோசமடைகிறது. தோல் வறட்சி, மற்றும் புள்ளிகள் தோலில் தோன்ற ஆரம்பிக்கின்றன. சிவப்பு மற்றும் திட்டுகள் புரதக் குறைபாட்டைக் குறிக்கின்றன.
தசைகள் சேதமடைந்துள்ளன
உடலில் புரோட்டீன் குறைபாடு ஏற்பட்டால், உடல் தசைகளில் இருந்து புரதத்தை எடுக்கத் தொடங்குகிறது. அதனால் உடலின் அத்தியாவசிய செயல்பாடுகளை செய்ய முடியும். இதனால் உடல் மெலிந்து பலவீனமடையத் தொடங்குகிறது.
எனவே, உடலில் புரதத்தின் அளவு போதுமானதாக இருக்க வேண்டும்.புரதம் இல்லாததால், எலும்புகள் பலவீனமாகி, எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அடிக்கடி அதிகரிக்கிறது.
2021 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, புரதத்தை அதிகம் உட்கொள்பவர்களின் இடுப்பு மற்றும் முதுகுத்தண்டில் குறைந்த புரதத்தை உட்கொள்பவர்களை விட 6 சதவீதம் அதிக எலும்பு அடர்த்தி உள்ளது. இதனால் அவர்களின் எலும்புகள் முறிவதற்கான வாய்ப்புகளும் குறைவு.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |